அன்பை வெளிப்படுத்த அருண் அளித்த பரிசு

'பார்­டர்' படம் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெறும் என்று தாம் உறு­தி­யாக நம்­பு­வ­தா­கச் சொல்­கி­றார் அருண் விஜய்.

இப்­ப­டத்தை அறி­வ­ழ­கன் இயக்கி உள்­ளார். இரு­வ­ரும் ஏற்­கெ­னவே 'குற்­றம் 23' படத்­தில் இணைந்து பணி­யாற்றி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் 'பார்­டர்' படத்­தின் இயக்­கு­நர், ஒளிப்­ப­தி­வா­ளர், தொழில்­நுட்­பக் குழு­வி­னர் உள்­ளிட்­டோ­ருக்கு 'ஐ பேட்' பரி­ச­ளித்­துள்­ளார் அருண்.

படம் தாம் எதிர்­பார்த்­த­தை­விட சிறப்­பாக அமைந்­தி­ருப்­ப­தா­க­வும் அந்த மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தவே தம்­மால் இயன்ற பரிசை அளித்­த­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

"இந்­தப் படத்­தில் உங்­கள் (படக்­கு­ழு­வி­னர்) அனை­வ­ரது அற்­பு­த­மான பணிக்­கான ஓர் அன்­பின் அடை­யா­ளம் இந்­தப் பரிசு. இந்த அற்­பு­த­மான கதை­யில் என்னை நடிக்க வைத்த இயக்­கு­நர் அறி­வ­ழ­க­னுக்கு நன்றி.

"இந்­தக் குழு­வின் மீது நம்­பிக்கை வைத்த தயா­ரிப்­புத் தரப்­புக்­கும் நன்றி தெரி­விக்­கி­றேன். இது என்­னு­டைய மிகச்­சி­றந்த படங்­களில் ஒன்­றா­க­வும் என் சினிமா வாழ்­வில் ஒரு மைல் கல்­லா­க­வும் இருக்­கும்," என்று அருண் விஜய் தமது டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தப் படத்­தில் ரெஜினா, ஸ்டெஃபி படேல் ஆகிய இரு­வ­ரும் நாய­கி­க­ளாக நடித்­துள்­ள­னர்.

பக­வதி பெரு­மாள் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார். பி.ராஜ­சே­கர் ஒளிப்­ப­திவைக் கவ­னிக்க, சாம் சி.எஸ். இசை அமைத்­துள்­ளார்.

எதிர்­வ­ரும் நவம்­பர் 19ஆம் தேதி 'பார்டர்' படம் வெளி­யீடு காண்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!