‘எனிமி’யை முடக்க சிலர் திட்டம்: தயாரிப்பாளர் புகார்

விஷால், ஆர்யா நடிப்­பில் உரு­வாகி உள்ள 'எனிமி' படம் தீபா­வ­ளி­யன்று வெளி­யா­கும் என அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், போது­மான திரை­ய­ரங்­கு­கள் கிடைக்­கா­மல் அப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர் வினோத் குமார் தவித்து வரு­கி­றார். தன் படத்தை வேண்­டும் என்றே சிலர் முடக்­கு­வ­தாக அவர் புகார் எழுப்­பி­யுள்­ளார்.

வேறொரு பெரிய படம் தீபா­வ­ளிக்கு வெளி­யா­வ­தால் அதைத்­தான் திரை­யிட வேண்­டும் என்று ஒரு­த­ரப்­பி­னர் திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­களைக் கட்­டா­யப்­ப­டுத்­து­வ­தாக தமக்கு தக­வல் கிடைத்­துள்­ளது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"நான் கேள்­விப்­பட்­டது உண்­மை­யாக இருந்­தால் தயா­ரிப்­பா­ளர் சங்­கத்­தில் ஆத­ரவு கேட்­பேன். சினிமா துறைக்கு இத்­த­கைய போக்கு உத­வாது.

"தமி­ழ­கத்­தில் மொத்­தம் உள்ள 900 திரை­ய­ரங்­கு­களில் ஒரே படத்தை வெளி­யிட வேண்­டும் என்­பது சரி­யல்ல. அப்­படி வெளி­யிட்­டா­லும் அவர்­கள் எதிர்­பார்க்­கும் வசூல் கிடைக்க வாய்ப்­பில்லை. அப்­ப­டி­யொரு சாதனை இது­வரை தமி­ழ­கத்­தில் நடந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.

"என் படத்­துக்­காக நான் கேட்­பது 250 திரை­ய­ரங்­கு­கள் மட்­டும்­தான். அது கிடைத்­தாலே போதும்," என்று வினோத் குமார் தெரி­வித்­துள்­ளார்.

இது­போன்ற பிரச்­சி­னை­கள் இருந்­தா­லும் 'தீபா­வளி வெளி­யீடு' என்­ப­தில் இருந்து 'எனிமி' பின்­வாங்­காது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், ஓடிடி நிறு­வ­னங்­கள் நல்ல தொகை­யைக் கொடுக்க முன்­வந்த போதும், அதை தவிர்த்து திரை­ய­ரங்­கு­களை நாடி­யுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்.

'எனிமி' படம் தீபா­வளி அன்று வெளி­யா­கா­விட்­டால் தனக்கு நீதி கிடைக்க எத்­த­கைய போராட்­டத்­தி­லும் ஈடு­ப­டத் தயார் என்­றும் வினோத் குமார் தெரி­வித்­துள்­ளார்.

அவர் 'அண்ணாத்த' படத்தைத்தான் மறைமுகமாகச் சாடுவதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!