‘நள்ளிரவில் கதை கேட்டார் சந்தானம்’

'டிக்­கி­லோனா' படம் வசூல் ரீதி­யில் வெற்றி பெற்­றதை அடுத்து சந்தானம் நடிப்­பில் 'சபா­பதி' வெளி­யா­கிறது.

அண்­மை­யில் இப்­ப­டத்­தில் இடம்­பெற்­றுள்ள 'மயக்­காதே மாயக் கண்ணா' என்ற பாடல் வெளி­யாகி நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

கதைப்­படி, ஸ்ரீரங்­கத்­தில் வாழும் சாதா­ரண குடும்­பத்­தைச் சேர்ந்த இளை­ய­ராக நடித்­துள்­ளார் சந்தானம். வேலை தேடும் பட­லத்­தில் ஈடு­படும் அவர், தன் வாழ்க்கை­யில் எதிர்­பா­ராத சம்­ப­வங்­க­ளால் அலைக்­க­ழிக்­கப்­ப­டு­கி­றார். ஏன் இவ்­வாறு நிகழ்­கிறது என்­பதை அவர் கண்­ட­றிய முற்­ப­டு­வதை நகைச்­சு­வை­யா­க­வும் சிந்­த­னை­யைத் தூண்­டும் வகை­யி­லும் காட்­சிப்­ப­டுத்தி உள்­ள­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர் ஸ்ரீனி­வாச ராவ்.

"இந்­தப் படத்­தில் யார் நடித்­தால் நன்­றாக இருக்­கும் என யோசித்­தேன். என் நினை­வுக்கு முத­லில் வந்­தது சந்­தா­னம்­தான்.

"அவர் படப்­பி­டிப்­பில் இருந்­த­போது கதை சொல்வதற்காகச் சென்­றேன். நள்­ளி­ரவு ஒரு மணிக்­குத்­தான் கடைசிக் காட்சி எடுக்­கப்­பட்­டது. அதன் பிறகு கதை கேட்க உட்­கார்ந்­த­வர், அடுத்த மூன்று மணி­நே­ரம் அசை­யா­மல் காட்­சி­களை விவ­ரிக்­கச் சொல்லி கேட்­டார்.

"மிமிக்ரி பாணி­யில் பல குரல்­களில் ஏற்ற இறக்­கத்­து­டன் நான் கதை சொன்ன வித­மும் அவ­ருக்­குப் பிடித்­தி­ருந்­தது. பல இடங்­களில் அவ­ரால் சிரிப்­பைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

"மக்­க­ளைச் சிரிக்­க­வைக்­கும் ஒரு கலை­ஞனை நம்­மு­டைய கதை சிரிக்க வைத்­துள்­ளதே என்று பெரு­மி­த­மாக இருந்­தது. அப்­போதே இந்­தப் படம் வெற்றி பெறும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டது.

"நகைச்­சுவை நடி­க­ராக இருந்­த­வர் கதா­நா­ய­க­னாக மாறி, கொஞ்­சம் கொஞ்­ச­மாக தன்­னைச் செதுக்­கிக்கொண்டு ஓர் இடத்­தைப் பிடித்­துள்­ளார்.

"நாய­க­னாக மாறி­ய­பின், சண்­டைக்­காட்­சி­களில் அவர் நடித்­தது கச்­சி­த­மாக இருந்­தது. பிறகு உடல் எடை­யைக் குறைத்து நடித்­த­தும் கைகொ­டுத்தது.

"இந்­தப் படத்­தில் அவர் சந்­தா­ன­மாக எந்த இடத்­தி­லும் தெரிய மாட்­டார். அந்த அளவு வித்­தி­யா­ச­மான நடிப்பை வழங்­கி­யுள்­ளார்," என்­கி­றார் ஸ்ரீனி­வாச ராவ். இவரும் சந்தானமும் மிக விரைவில் மீண்டும் இணைய இருப்பதாகத் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!