ரஜினி ஒருவர் மட்டுமே 'சூப்பர் ஸ்டார்' என்று நடிகர் சூர்யா கூறிஉள்ளார். இதையடுத்து, ரஜினி ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சூர்யா நடித்து வரும் புதுப்படம் 'ஜெய் பீம்'. இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் சூர்யாவை, 'சூப்பர் ஸ்டார்' என்று குறிப்பிட்டார். மேலும், இப்படம் தொடர்பான செய்திக்குறிப்பு ஒன்றிலும் சூர்யாவின் பெயருக்கு முன்னால் 'சூப்பர் ஸ்டார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில், சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
"ரஜினி ஒருவர் மட்டும்தான் எங்களுக்கு 'சூப்பர் ஸ்டார்'," என்று அவர் கூறியுள்ளார்.