வெளியீட்டுக்கு முன்பே கிடைத்த விருது

வெளியீட்டுக்கு முன்பே கிடைத்த விருது

1 mins read
3ee448c3-3ca9-4f1a-b70a-bf4071524384
-

யோகி­பாபு நடித்த 'மண்­டேலா' திரைப்­ப­டம் ஆஸ்­கர் விருது பரிந்­துரை பட்­டி­ய­லில் இடம் பிடித்­துள்ள நிலை­யில், அவர் தற்­போது நடித்து வரும் 'மீன் குழம்பு' என்ற படத்­துக்கு விருது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­தி­ரைப்­ப­டத்­தின் திரைக்­கதை அனைத்­து­லக திரைப்­பட விழா ஒன்­றில் சிறந்த 'எதிர்­மறை நகைச்­சுவை' (பிளாக் காமெடி) பிரி­வில் விரு­துக்கு தேர்­வாகி உள்­ளது.

படம் உரு­வா­கும் முன்பே விருது கிடைப்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தா­க­வும் தாம் சிறந்த கதைக்­க­ளங்­களைத் தேர்வு செய்து வரு­வ­தற்கு இதுவே சான்று என்­றும் யோகி­பாபு கூறி­யுள்­ளார்.