ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஆக உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை படைத்துள்ளார் நடிகை நிவேதா தாமஸ்.
சிகரம் தொட்டபின், இந்திய தேசிய கொடியுடன் நிற்கும் புகைப்படத்தைத் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ், மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிவேதா, கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'நவீன சரஸ்வதி சபதம்' படத்தில் ஜெய்க்கு நாயகியாக நடித்தார்.
'ஜில்லா' படத்தில் விஜய்க்குத் தங்கையாக நடித்த இவர், பின்னர் 'பாபநாசம்' படத்தில் கமலுக்கும் 'தர்பார்' படத்தில் ரஜினிக்கும் மகளாக நடித்தார். தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
வடகிழக்கு தான்சானியாவில் 5,895 மீட்டர் (19,430 அடி) உயரத்தில் அமைந்துள்ளது கிளிமாஞ்சாரோ. அந்தச் சிகரத்தில் ஏற, நிவேதா ஆறு மாதகாலம் பயிற்சி எடுத்தாராம்.