'எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை'

3 mins read
54349612-57ac-4b70-b335-2636eb1edd36
விஜய் சேதுபதி -

தேசிய விருதை வாங்­கி­யது மிகுந்த மகிழ்ச்சி அளித்­தி­ருப்­ப­தாக நடி­கர் விஜய் சேது­பதி தெரி­வித்­துள்­ளார்.

இதுவே முதல்முறை­யாக தாம் பெறும் பெரிய விருது என்­றும் இந்த அனு­ப­வம் புதி­தாக இருந்­தது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

'சூப்­பர் டீலக்ஸ்' திரைப்­ப­டத்­தில் 'ஷில்பா' என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­த­தற்­காக அவ­ருக்கு விருது அளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், விருது கிடைக்­கும் என்ற எதிர்­பார்ப்­போடு தாம் நடிக்­க­வில்லை என்றும் சேது­பதி கூறி­யுள்­ளார்.

"நான் 'ஷில்பா' வாக நடித்­த­மைக்­காக இந்த விருது கிடைக்­கி­ற­தென்­பது, இன்­னும் மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது.

"இயக்­கு­நர் தியா­க­ரா­ஜன் குமா­ர­ரா­ஜாவை மட்­டுமே நம்பி, அந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தேன்.

"அவ­ருக்கு இந்தத் தரு­ணத்­தில் என்­னு­டைய முழு நன்­றி­யை­யும் தெரி­விக்க விரும்­பு­கி­றேன்.

"ஷில்பா கதா­பாத்­தி­ரம், இந்­த­ள­வுக்குப் பேசப்­படும், விருது கிடைக்­கும் என்ற எதிர் பார்ப்­போடு நான் நடிக்­க­வில்லை.

"இயக்­கு­நர் சொன்­னார் என்­ப­தற்­காக, நடித்­தேன். படம் வெளி­யா­ன­வு­டன் மக்­கள் எனது முயற்சி குறித்து என்ன நினைக்­கி­றார்­கள் என்­பதை அறிய ஆவ­லாய் இருந்­தேன்.

"அவர்­கள் ஏற்­றுக்­கொண்­டார்­கள் என்­பதே மிகுந்த மன­நி­றை­வாக இருந்­தது. அவர்­க­ளைத் தொடர்ந்து தற்­போது ஷில்பா­வுக்கு விருது அங்­கீ­கா­ர­மும் கிடைத்­தி­ருப்­ப­தில் இரட்­டிப்பு மகிழ்ச்சி," என்று விஜய் சேது­பதி தெரி­வித்­துள்­ளார்.

விருது பெற டெல்­லி­யில் தங்க வேண்டி இருந்­த­தால் பலரை சந்­திக்க முடிந்­தது என்­றும் பல்­வேறு மொழி­க­ளைப் பேசு­ப­வர்­களை ஒரே இடத்­தில் ஒரே நேரத்­தில் சந்­திக்க முடிந்­தது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"விருது வழங்­கும் நிகழ்வு என்­ப­தை­விட கலை­ஞர்­கள் அனை­வ­ரை­யும் ஒரே இடத்­தில் சந்­திப்­பது பெரிய வாய்ப்பு. சில வேற்று மொழி கலை­ஞர்­கள் என் படத்தைப் பார்த்த தா­கக் கூறி பாராட்­டி­யது, இன்­னும் மகிழ்ச்சி யைக் கொடுத்­தது," என்­றார் விஜய் சேதுபதி.

இதற்­கி­டையே, விஜய்­சே­து­பதி ஒரு ஃபீனிக்ஸ் பறவை என்று கூறி­யுள்­ளார் இயக்­கு­நர் சீனு ராம­சாமி. இவ­ரது இயக்­கத்­தில் சேது­பதி நடித்­துள்ள 'மாம­னி­தன்' படம் விரை­வில் வெளி­யாக உள்­ளது.

'தர்­ம­துரை' படத்­தின் வெற்­றிக்­குப் பிறகு சேது­பதி தனக்­குத் தந்த பரி­சு­தான் 'மாம­னி­தன்' என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

"இது வாழ்க்கை மீது நம்­பிக்கை ஏற்­படுத்தி, சக மனி­தர்­க­ளி­டம் அன்பு காட்­டச் சொல்­லும் படம். இதில் சேது­பதி நடிப்­ப­து­தான் மிகப் பொருத்­த­மாக இருக்­கும். எனக்­கும் சேது­வுக்­கும் இடையே எப்­போ­தும் ஒரு­வித பேரன்­புப் பரி­மாற்­றம் இருக்­கும். இந்­தப் படத்­தில் அவரை நிறைய இடங்­களில் ரசித்­தேன்," என்­கி­றார் சீனு.

இந்­தப் படத்­தில் மூன்று வித­மான தோற்­றங்­களில் நடித்­துள்­ளா­ராம் சேது­பதி. திரு­மணத்­திற்கு முந்­தை­யப் பரு­வம், இரண்டு குழந்­தைக்­குத் தந்தை, 20 வய­துப் பைய­னுக்­குத் தந்தை என்று மூன்­றுமே வித்­தி­யா­ச­மாக இருக்­கு­மாம்.

சரி, 'மாம­னி­தன்' குறித்து சேது­பதி என்ன நினைக்­கி­றார்?

"'மாம­னி­தன்' பாதி கற்­பனை, பாதி உண்மை. நிகழ வேண்­டிய அனு­ப­வங்­களும் நிக­ழக்­கூ­டாத அனு­ப­வங்­களும் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பதை விவ­ரிக்­கும் படம் இது.

"ராதா­கி­ருஷ்­ணன் என்ற ஆட்டோ ஓட்டு­நரைப் பற்­றிய கதை. யாரா­வது சாலை­யில் அடி­பட்­டுக் கிடந்­தால் யாரும் உதவி செய்­வ­தில்லை. இப்­போ­தெல்­லாம் குறைந்­த­பட்­சம் 'ஐயோ' என்று பத­று­வ­தைக் கூட காண முடி­வ­தில்லை.

"ஆனால் எல்­லோ­ரும் அப்­படி கிடை­யாது. அதை 'மாம­னி­தன்' திரை­யில் விவ­ரிப்­பான்," என்­கி­றார் சேது­பதி.

"ஒரு நல்ல படம் என்­பது, அதை பார்க்­கும் அனு­ப­வத்­தோடு மட்­டும் முடிந்­து­வி­டக் கூடாது. பார்த்­த­வ­ரின் மன­தில் தொடர்ந்து நிலைத்­தி­ருக்க வேண்­டும். அப்­ப­டிப்­பட்ட ஒரு படைப்­பா­கத்­தான் இதை உரு­வாக்கி இருக்­கி­றோம்," என்கிறார் சீனு ராமசாமி.