நடிகை சமந்தா விவாகரத்து செய்தியை அறிவித்தவுடன் மூன்று 'யூடியூப்' ஒளிவழிகள் தம்பதிகளின் பிரிவுக்கான காரணங்கள் என்று பல
தவறான செய்திகளை வெளியிட்டு இருந்தன. அவற்றைத் தொடர்ந்து
பிரபல மருத்துவர் ஒருவரும் தவறாக செய்தி வெளியிட்டதைக் கண்டித்து சமந்தா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கினை பதிவு செய்தார். உடனே மருத்துவர், "சமந்தா என்னுடைய பேத்தி போன்றவர்," என்று கூறி மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அதனால் சமந்தாவின் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர்.
தெலுங்கு, தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பொறாமைப்படும்படி வாழ்ந்து வந்த பிரபல நடிகை சமந்தா திடீரென்று கணவர் நாக சைதன்யாவை விட்டுப் பிரிவதாக கூறியது இன்றளவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அண்மையில் சமந்தா தன்னுடைய 'ஸ்டைலிஸ்ட்' ப்ரீத்தமுடன் காட்டிய நெருக்கம்தான் இவர்களின் பிரிவுக்கு காரணம் என வதந்திகள் தீயாக பரவின.
பின்னர் ப்ரீத்தம், "சமந்தா தன்னுடைய சகோதரி," போன்றவர் என்று கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதுபோல் தன்னைப் பற்றி பரவிய வதந்திகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சமந்தா விளக்கம் அளித்தபோதும், மூன்று 'யூடியூப்' ஒளிவழிகள்
சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து, 'சமந்தா தவறு செய்கிறார்', 'சமந்தாவின் விவாகரத்துக்கு என்ன காரணம்' என்பது போன்ற விவாதங்களை முன்
வைத்தன.
சமந்தா, நாக சைதன்யா பிரிந்ததற்கான காரணங்கள் யாருக்கும் தெரியாது. ஆனால் 'யூடியூப்' ஒளிவழிகளில்
பங்கேற்றவர்களில் சிலர் சமந்தாவும் நாக சைதன்யாவும் பிரிந்ததற்கு முக்கிய காரணங்களாக சமந்தாவுக்கு
திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் அவர்
குழந்தைப் பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என்றும் யூகங்கள் அடிப்படையில் சில தகவல்களைக் கூறினர்.
இதற்கிடையே ஹைதராபாத்தைச் சேர்ந்த திரைப்
பிரபலங்களுக்கு சிகிச்சை அளித்து வரும் பிரபல
மருத்துவர் சி.எல்.வெங்கட் ராவ், "சமந்தாவின் தவறான தொடர்புதான் அவரது விவாகரத்துக்கு காரணம்," என பகீர் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். இது சமந்தா
ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தன்னைப் பற்றித் தவறான தகவல்களைப் பகிர்ந்த 'யூடியூப்' ஒளிவழிகள் மீதும் வெங்கட் ராவ் மீதும் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் சமந்தா.
இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்த மருத்துவர் வெங்கட் ராவ், "சமந்தா எனது பேத்தி போன்றவர். அவருக்கு நீதி கிடைக்க நான் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். சமந்தா குறித்து நான் சொன்ன கருத்துக்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. சமூக வலைத்
தளங்களில் பரவிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அவ்வாறு பேசினேன். தவறாகப் பேசியதற்கு சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று விளக்கமளித்துள்ளார். இதைக் கேட்ட சமந்தா ரசிகர்கள், "படித்தவர் செய்யும் வேலையா இது?" என்று வலைத்தளங்களில் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.
நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்தபின் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறி வந்த சமந்தா, யோகா, தியானத்தில் ஈடுபட்டார். தனது தோழியுடன் வட
மாநிலங்களுக்கு ஆன்மிக யாத்திரை சென்று வந்தார்.நவம்பர் மாதம் முதல் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
சமூகவலைத்தளத்தில் நேர்மறையான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். "நீங்கள் இப்போது இப்படி இருப்
பதற்கு நன்றி செலுத்துங்கள். நாளை நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ அதற்காக தொடர்ந்து
போராடுங்கள்," என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.

