அபிஷேக்கின் சம்பளம்

அபிஷேக்கின் சம்பளம்

1 mins read
9906fb60-a0e7-40e1-bb6c-8180da962d5f
-
Google News Preferred Icon

'பிக்பாஸ் நிகழ்ச்சி' என்றாலே எப்போதும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. அதே நிலைதான் 'பிக்பாஸ் 5' நிகழ்ச்சியிலும் நடந்து வருகிறது.

முதல் வாரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக மலேசிய மாடல் நாடியாசங் வெளியேறினார். வெளியே வந்த இவர், "இந்தியா சென்று வந்த செலவு கூட எனக்கு சம்பளமாக கிடைக்கவில்லை," என்று வேதனையோடு தெரிவித்திருந்தார். இந்நிலையில் கமலை கிண்டல் செய்து பேசியிருந்த அபிஷேக் இரண்டாம் வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.

தற்போது அபிஷேக் மூன்று வாரத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவரது ஒரு வார சம்பளம் ரூ.1.75 லட்சம் என்றும் மூன்று வாரத்திற்கு சேர்த்து ரூ.5.25 லட்சம் சம்பளத்தோடு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பிக்பாஸ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.