டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழில் 'அசுரன்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய
தனுஷுக்கு தேசிய விருது
வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் கலந்துகொண்டு 'மணிகர்ணிகா', 'பங்கா' படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டார். அப்போது நடிகர் தனுஷுடன் ஆர்வமாக ஃசெல்பி எடுத்துக் கொண்டார் கங்கனா.
'தலைவி' படத்தில் நடித்துள்ள கங்கனா அண்மைக்காலமாக தமிழ் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அந்தவகையில் தனுஷுடன் அவர் விரைவில் இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப் படுகிறது.
தனுஷ் நடித்துள்ள 'மாறன்' படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

