'அண்ணாத்த' டிரெய்லர் வெளியீடு

'அண்ணாத்த' டிரெய்லர் வெளியீடு

1 mins read
6ac39f6b-24ff-41f8-a892-c0a5c8b2e619
-
Google News Preferred Icon

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் டிரெய்லர் சற்று முன்பு வெளியீடு கண்டது.

இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு, வரும் நவம்பர் 4ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

சிவா இயக்கத்தில் வெளியான 'வீரம்', 'விஸ்வாசம்' போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் 'அண்ணாத்த' தயாராகிறது.

அண்ணன்-தங்கை பாசம் இப்படத்தில் பிரதானமாக இருக்கும் என்கிறது படக்குழு.

குறிப்புச் சொற்கள்
ரஜினி