தமிழில் கார்த்திக்குடன் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா இந்தியில் ஒரு படத்தில் குத்துச் சண்டை வீராங்கனையாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதனால் அவர் குத்துச் சண்டை
பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் காணொளிகள் வெளியாகி பரவலாகப்
பகிரப்பட்டு வருகிறது.
துருதுரு பாவனைகளும் திமிரான உடல்மொழியும் சுண்டியிழுக்கும் தோற்றப் பொலிவும் கட்டிப்போடும் நடிப்பும் எப்பேர்ப்பட்ட இளசுகளின் நெஞ்சையும் துளைத்திடவே செய்யும்.
அந்தளவுக்கு தென்னிந்திய சினிமாவில் அழகான முகபாவங்கள் மூலம்ரசிகர்களை அடிமையாக்கி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த இவர் தமிழில் எப்பொழுது நடிப்பார் என பலரும் காத்துக்கொண்டிருக்க, கார்த்திக்கு ஜோடியாக
'சுல்தான்' திரைப்படத்தில் நடித்து
தமிழில் அறிமுகம் ஆனார்.
அந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அது சூர்யாவாக இருக்கும் என்று கூறப்
படுகிறது.
விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இவர் ரசிகர்களின் மனம் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு
அர்ஜுன், ஃபஹத் பாசில் நடிப்பில்
உருவாகியிருக்கும் 'புஷ்பா' படத்திலும் நடித்திருக்கிறர். இந்தப் படம் டிசம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாக இருக்கிறது.
தொடர்ந்து முன்னணி நாயகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்தியிலிருந்தும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி இருக்கின்றன.
அந்த வகையில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நாயகனாக நடிக்கும் 'மிஷன் மஞ்சு' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். அதைத் தொடர்ந்து அமிதாப்பச்சனுக்கு மகளாக 'குட்பை' படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடிக்க அங்கேயே தனியாக வீடு ஒன்றையும் வாங்கி உள்ளார்.
தென்னிந்தியாவைப் போலவே பாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டு இருக்கும் ராஷ்மிகா மந்தனா அங்கு இருக்கும் நடிகைகளுக்கு ஈடு கொடுக்க
இப்பொழுது கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அடுத்து இவர் நடிக்க இருக்கும் ஓர் இந்திப் படத்திற்காக வெறித்தனமாக குத்துச் சண்டை பயிற்சிசெய்து வருகிறார். அவர் குத்துச் சண்டை பயிலும் காட்சிகளைக் காணொளியாக எடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
துல்கர் சல்மான் முதன்முதலாக தெலுங்கில் அறிமுகமாகும் ராணுவ
வீரரின் காதல் கதைக் களத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கியமான வேடத்தில் நடித்து இருக்கிறார். ஒரே ஆண்டில் மூன்று ஆடம்பர வீடுகளை வாங்கியவர் என்ற பெயரையும் தட்டிச் சென்றுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
"வழக்கமான மசாலாப் படங்களில் நடித்து மக்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒரு படத்திற்கு நாயகன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நாயகியும் முக்கியம். விறுவிறுவென்று மேலே சென்று பின் உடனே விழக்கூடாது. அதனால் ஒவ்வொரு படத்தையும் கவனமாக ஒப்புக்கொண்டு அவற்றிலிருந்து நிறைய கற்க முயல்கிறேன்,'' என்று அவர் கூறியுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து புகழின் உச்சிக்குச் சென்ற 'கீதா கோவிந்தம்' படத்தில் ஒரு காட்சி.

