திரைத் துளிகள்

16ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவர்கள் 'குஞ்சலி மரைக்காயர்' என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராகப் போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் நாயகிகளாக நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் விரைவில் 'ஓடிடி'யில் வெளியாக இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டாக்டர்'. உலகளவில் வெளியான இப்படம் இதுவரை 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயன் நடித்ததில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை 'டாக்டர்' படைத்துள்ளது. இத்திரைப்படம் தீபாவளி அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவித்திருக்கின்றனர்.

விக்ரம் பிரபு 'டாணாக்காரன்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு காவல்துறையினரை 'டாணாக்காரன்' என்றுதான் அழைப்பார்கள். சுவரொட்டியிலும் விக்ரம் பிரபு அதே வேடத்தில் இருக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்திருக்கிறார்.நேரடியாக 'ஓடிடி' தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

'ஜகமே தந்திரம்' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43வது படமான 'மாறன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் பொங்கல் பண்டிகையையொட்டி 'ஓடிடி'யில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 'ஜகமே தந்திரம்' படம் 'ஓடிடி'யில் வெளியானபோது தனுஷ் கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் 'மாறன்' படமும் 'ஓடிடி'யில் வெளியாக உள்ளதாக வெளியான செய்தி தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடித்து வந்தார். அண்மையில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் வழக்கு மிகவும் சிக்கலாக மாறியுள்ளதால் ஷாருக்கான் படப்பிடிப்புகளில் தற்பொழுது கலந்துகொள்ள முடியாது என்று அறிவித்துவிட்டார். அதனால் நயன்தாரா இந்தப் படத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ஷாருக்கான் படத்தில் நயன்தாராவிற்குப் பதிலாக சமந்தாவை ஒப்பந்தம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!