தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த நடிகை அமலா பால் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அன்றைய தினம் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை திரைத்துறையிலேயே முதலீடு செய்ய விரும்பி தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
இவர் நடித்திருக்கும் 'கடாவர்' என்ற
படத்தை அவரது சொந்த நிறுவனம் மூலம் வெளியிட இருக்கிறார்.
இந்தப் படத்தில் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கும் அமலாபால், ஒரு வாரம் மருத்துவமனைக்குச் சென்று துறை சார்ந்த மருத்துவர்களிடம் பயிற்சி பெற்று இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

