விஜய் தொலைக்காட்சியில் ஒளி
பரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' நாடகம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைத் தன்வசம் வைத்திருக்கிறது.
தற்போது விறுவிறுப்புடனும் பல திருப்பங்களுடனும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நாடகத்தில் கண்ணம்மாவாக நடித்து வந்த 'ரோஷினி ஹரிப்ரியன்' நாடகத்திலிருந்து திடீரென
விலகியுள்ளார்.
'மாடலிங்' மூலம் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ரோஷினி அக்டோபர் 23ஆம் தேதி படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
படப்பிடிப்பு முடிந்ததும், "இன்று நான் இந்த நாடகத்தில் நடிப்பதில் இருந்து வெளியேறு
கிறேன்," என்று கூறியுள்ளார். இது படப்பிடிப்புக் குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
சின்னத் திரையில் நடித்ததன் மூலம் பெரிய திரையில் நடிக்க பல வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அதனால்தான் ரோஷினி இந்த முடிவுக்கு வந்தார்," என்று அவருடைய நெருங்கிய நண்பர் கூறியுள்ளார்.
இவரின் இந்த முடிவு பாரதி கண்ணம்மா ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் நாடகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்திள்ளது.