அவை மட்டும் தேவையா? சமந்தா அதிரடி

அவை மட்டும் தேவையா? சமந்தா அதிரடி

1 mins read
9fa1bedb-ec95-4405-aced-9c942d608ff4
கடந்த ஐந்தாண்டுகளாக நாக சைதன்யாவுடன் இருந்தபடி தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்ட படங்களை எல்லாம் சமந்தா இப்போது அகற்றிவிட்டார். படம்: இணையம் -

நாக சைதன்யாவுடன் இருக்கும் எல்லாப் படங்களையும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து அகற்றிவிட்டார் சமந்தா.

கணவர் நாக சைதன்யாவும் தாமும் மணவாழ்க்கையில் இருந்து பிரிய முடிவுசெய்துள்ளதாக மூன்று வாரங்களுக்குமுன் சமந்தா அறிவித்தார். இருவரும் மணமுறிவு கோரி வழக்கும் தொடுத்துவிட்டனர்.

சில மாதங்களுக்குமுன் தமது பெயருக்குப் பின்னால் இருந்த அக்கினேனி என்ற குடும்பப் பெயரை சமந்தா நீக்கினார். அதனைத் தொடர்ந்து, இருவருக்கு இடையிலும் மனக்கசப்பு இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், கடந்த ஐந்தாண்டுகளாக நாக சைதன்யாவுடன் இருந்தபடி தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்ட படங்களை எல்லாம் சமந்தா இப்போது அகற்றிவிட்டார்.