நடிப்புக்கு முழுக்குப் போடும் ரஜினிகாந்த்

நடிப்புக்கு முழுக்குப் போடும் ரஜினிகாந்த்

3 mins read
e7cfb7d9-a276-4482-8b91-c3622a1186c4
-

சூப்பர் ஸ்டாரின் கடைசிப் படத்தை இயக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

சூப்­பர் ஸ்டார் என்று பட்­டப்­பெ­ய­ரு­டன் வலம் வந்­து­கொண்டு இருக்­கும் ரஜி­னி­காந்த் தனது 170வது படத்­து­டன் நடிப்­புக்கு முழுக்குப் போடப்­போ­வ­தாக அறி­வித்து இருக்­கி­றார். அவ­ரின் கடைசிப் படத்தை இயக்­கப்­போ­கும் அதிர்ஷ்­ட­சாலி தானாக இருக்­க­வேண்­டும் என்று பல­ரும் முயற்­சிக்க தனு­ஷுக்கு அடித்­தது அந்த யோகம். இத­னால் ரஜினி குடும்­பத்­தி­னர், தனுஷ்

ரசி­கர்­கள் மகிழ்ச்­சி­யில் இருக்­கின்­ற­னர்.

சிறுத்தை சிவா இயக்­கத்­தில் ரஜி­னி­யின் 168வது படம்

'அண்­ணாத்த'. இமான் இசை­

அமைப்­பில் நயன்­தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்­றும் பலர் இந்­தப் படத்­தில் நடித்­தி­ருக்­கின்­ற­னர். படம் நவம்­பர் 4ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி­யாக இருக்­கிறது. இந்­தப் படத்­தை­ய­டுத்து 'தலை­வர் 169' படத்­தைக் 'கண்­ணும் கண்­ணும் கொள்­ளை­ய­டித்­தால்' படத்தை இயக்­கிய தேசிங்கு பெரி­ய­சாமி இயக்­கவி­ருக்­கி­றார் என்று கூறப்­ப­டு­கிறது.

'தலை­வர் 170' படத்­து­டன் நடிப்­புக்கு முழுக்குப் போட முடிவு செய்­தி­ருக்­கி­றார் ரஜினி. அத­னா­லேயே ரஜி­னி­யின் கடைசிப் படத்தை இயக்க பலர் ரஜி­னிக்கு தூது

அனுப்­பி­யும் நேராகச் சென்­றும் தங்­கள் விருப்­பத்­தைத் தெரி­வித்தும் வந்­த­னர். ஆனால் அந்த வாய்ப்பை தன் மரு­ம­கன் தனு­ஷுக்கு

கொடுத்­து­விட்­டார் ரஜினி என்று கூறப்­ப­டு­கிறது.

ரஜி­னி­யின் தீவிர ரசி­க­ரான தனு­ஷுக்கு தன் தலை­வ­ரு­டன் சேர்ந்து ஒரு படத்­தி­லா­வது, குறைந்­த­பட்­சம் ஒரு காட்­சி­யி­லா­வது நடிக்­க­வேண்­டும் என்ற ஆசை நெடு நாட்­க­ளாக இருந்­து வந்­தது. அந்த ஆசையை அவர் பல­முறை தெரி­வித்­தும் நிறை­வே­ற­வில்லை.

இந்­நி­லை­யில் தன் படத்­தை இயக்­கும் வாய்ப்பைக் கொடுத்து மரு­ம­கனை திக்­கு­முக்­காட வைத்­தி­ருக்­கி­றா­ராம் ரஜினி. மேலும்

ரஜி­னி­யின் கடைசிப் படத்தை மகள்­கள் ஐஸ்­வர்­யா­வும் சவுந்­தர்­யா­வும் சேர்ந்து தயா­ரிக்­கப் போகி­றார்­

க­ளாம். ஆக, 'தலை­வர் 170' ஒரு குடும்பத் தயா­ரிப்­பாக உரு­வாக இருக்­கிறது. 'ப.பாண்டி' படம் மூலம் இயக்­கு­ந­ரான தனுஷ் தன் முதல் படத்­தி­லேயே ரசி­கர்­க­ளைக் கவர்ந்­தார்.

பல­ருக்­கும் பிடித்த பட­மாக அமைந்­தி­ருந்­தது 'ப. பாண்டி'. அத­னால் 'தலை­வர் 170' படத்தை நிச்­ச­யம் சிறப்­பாக எடுப்­பார் என்று

நம்­பப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் ரஜினி நடித்­தி­ருக்­கும் 'அண்­ணாத்த' படத்­தின் முன்­னோட்­டக் காட்சி புதன்­கி­ழமை மாலை வெளி­யி­டப்­பட்­டது. முன்­னோட்­டக் காட்­சி­யைப் பார்த்த பல­ரும் 'ரஜி­னி­யின் அந்த சிரிப்பு, ஸ்டைல், குறும்பு தனி அழ­கு' என்று டுவிட்­ட­ரில் பதிந்து வரு­கின்­ற­னர்.

முன்­னோட்­டக் காட்­சி­யைப் பார்த்த ரஜி­னி­காந்­தின் மரு­ம­கன் தனுஷ், "அண்­ணாத்த! வின்­டேஜ்

ரஜி­னி­யி­சம்! 'முத்து', 'அரு­ணாச்­ச­லம்', 'படை­யப்பா' வரி­சை­யில் தலை­வ­ரைப் பார்க்க ரொம்ப மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது. மீண்­டும் திரை­யில் அவ­ரின் மாய வித்­தை­யைப் பார்க்க ஆவ­லாக இருக்­கி­றேன். வா சாமி! இது தலை­வர் திரு­விழா" என்று டுவிட்­ட­ரில் பதி­விட்டு இருக்­கி­றார்.

தனு­ஷின் டுவிட்­டைப் பார்த்­த­வர்­கள், "நீங்­கள் சொல்­வது மிக­வும் சரி. கிரா­மத்து ரஜி­னியைப் பார்க்க முடி­கிறது. மாம­னாரை இப்­படி தலை­வர், தலை­வர்னு கொண்­டா­டும் மரு­ம­கன் எத்­தனை பேருக்கு கிடைக்­கும்? ரஜினி கொடுத்து வைத்­த­வர்.

"நீங்­களும் தலை­வ­ரும் தேசிய விருது விழா­வில் விருது வாங்­கி­ய­தைப் பார்த்து சந்­தோ­ஷப்­பட்­டோம். மேலும் பல விரு­து­கள் வாங்க வாழ்த்­து­கள்," என்று பதி­விட்டு வரு­கி­றார்­கள்.

வெளி­நா­டு­களில் குறிப்­பாக அமெ­ரிக்­கா­வில் தமிழ்ப் படங்­

க­ளுக்­கான வியா­பா­ரம் பெரிய அள­வில் வர ரஜி­னி­காந்தின் 'சிவாஜி' படம்தான் காரணம்.

அது முதல் அங்கு தமிழ்ப் படங்களுக்கான வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. தீபாவளிக்கு 'அண்­ணாத்த' தமிழ்ப் படம் 416 திரை­ய­ரங்­கு­களில் திரை­யிட உள்­ளார்­கள்.

கொரோனா இரண்­டா­வது அலைக்­குப் பிறகு மக்­கள் வழக்க நிலைக்கு வந்து கொண்­டி­ருக்­கின்­

ற­னர்.

இந்த சூழ்­நி­லை­யில் 'அண்­ணாத்த' படம் மக்­களை மேலும் அதிக அள­வில் திரை­ய­ரங்கு

பக்­கம் வர­வ­ழைக்­கும் என எதிர்­பார்க்கப்படுகிறது.