தெலுங்கில் தொடர் வெற்றி

தெலுங்கில் தொடர் வெற்றி

1 mins read
03e8c142-937d-4fa5-b67f-4d9ba17ce8a8
-

தமிழைவிட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார் ஷ்ருதிஹாசன். இவர் நடிக்கும் அனைத்து தெலுங்கு திரைப் படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வருகின்றன.

ஷ்ருதிஹாசன் கடைசியாக தமிழில் நடித்த 'லாபம்' திரைப் படம் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. தமிழ் நடிகையாக இருந்தாலும் தெலுங்கில் இவர் நடித்த அண்மைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவதால் இவரைத் தெலுங்கு பட இயக்குநர் கள் தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு வருகின்றனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகும் 'சலார்' திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மிகப் பெரிய வெற்றி பெற்ற 'பாகுபலி', 'கே ஜி எஃப்' பட பிரபலங்கள் ஒன்றாக 'சலார்' படத்தில் இணைந்து உள்ளனர்.

அடிக்கடி சமூக வலைத் தளங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைக்கு உள்ளாகும் ஷ்ருதி, பல மாதங்களுக்குப் பிறகு கறுப்பு உடை ஒன்றை அணிந்துகொண்டு அழகாக படம் எடுத்து வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார். அது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.