வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' படத்தில் நாயகனாக நடிக்கிறார் சூரி. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' எனும் சிறுகதையை மையமாக வைத்து உருவாகிறது இப்படம்.
இதில் சூரியுடன் இணைந்து பவானி ஸ்ரீயும் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இதை ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

