நடிகர் கார்த்தியும் ஜோதிகாவும் விரைவில் இயக்குநர்களாக அவதாரம் எடுக்க உள்ளனர்.
இருவரும் இயக்கப்போகும் படங்களுக்கான கதை விவாதம் சத்தமின்றி நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்.
இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன்தான் திரையுலகுக்கு வந்தார் கார்த்தி. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.
நடிப்பிலும் அனுபவம் பெற்றுவிட்டதால் இயக்குநராக களமிறங்கலாம் என தந்தை சிவகுமார் பச்சைக்கொடி காட்டியுள்ளாராம். இவ்விஷயத்தில் மருமகள் ஜோதிகாவுக்கும் ஆதரவு கொடுத்துள்ளார்.
மிக விரைவில் சூர்யாவின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தை ஜோதிகா இயக்கும் அறிவிப்பு வெளியாகக்கூடும். அந்நிறுவனம் ஏற்கெனவே ஜோதிகா நடிப்பில் படங்கள் தயாரித்துள்ளது.