நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படத்துக்கு 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அவரது ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார்.
இதில் சந்தானத்தின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் மனோஜ் பீடா.
மணமுறிவு காரணமாக ஏற்பட்ட சோகம் ஒருபக்கம் இருந்தாலும், அடுத்தடுத்து தேடி வரும் வாய்ப்புகளால் உற்சாகம் அடைந்துள்ளாராம் சமந்தா (படம்).
தமிழில் இரண்டு புதுப் படங்களில் அவர் ஒப்பந்தமாகி உள்ளார். அவற்றுள் சாந்தரூபன் இயக்கத்தில் நடிக்கும் படத்தை 'டிரீம் வாரியர் பிக்சரஸ்' நிறுவனம் தயாரிக்கிறது.
மற்றொரு படத்தை இரட்டை இயக்குநர்கள் ஹரி சங்கர், ஹரி நாராயணன் இயக்குகின்றனர்.
தாம் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதாக நடிகர் ராமராஜன் கூறியுள் ளார். ஒரு திரைப்படத்தை இயக்கும் பணியில் ஈடு பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
"என்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகள் குறித்து கவலைப்படுவ தில்லை. யார், எதற்காக பரப்புகிறார்கள் என்று ஆராய்ச்சியும் செய்வதில்லை," என்கிறார் ராமராஜன்.