விஜய்யின் 69ஆவது படத்தில் இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக இப்படத்துக்காக ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் பரிசீலிக்கப்பட்ட தாகவும் இறுதியில் படத்தின் தயாரிப்புத் தரப்பு கியாராவைத் தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது சங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிக்கும் தெலுங்குப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் கியாரா.
மேலும், ராகவா லாரன்ஸ் இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்கிய 'லட்சுமி' படத்திலும் நடித்திருந்தார்.
விஜய் படத்துக்காக அவர் பெரிய சம்பளம் கேட்டதாகவும் தயாரிப்புத் தரப்பு அதற்கு உடனடியாக சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

