1,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்

1,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்

1 mins read

ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு நடந்த உண்­மைச் சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாக வைத்து ஒரு திகில் படத்தை உரு­வாக்கி வரு­கி­றார் பெரு­மாள் வர­தன்.

இவர் இணை ஒளிப்­பதி வாள­ரா­க­வும் இயக்­கு­ந­ரா­க­வும் பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­வர்.

"பல்­லவ மன்­னர்­களில் முக்­கி­ய­மா­ன­வர் நந்­தி­வர்­மன். அவர் சூழ்ச்­சி­யி­னால் கொலை செய்­யப்­ப­டு­கி­றார். அப்­போது நடந்த போரில் அவ­ரு­டைய ஊரே பூமிக்குள் புதைந்துவிடு­கிறது.

"அதில் இருந்து தின­மும் இர­வில் அமா­னுஷ்ய சம்­ப­வங்­கள் நடக்­கின்­றன.

"அந்த ஊரைச் சேர்ந்­த­வர்­கள் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே செல்­லக்­கூ­டாது என முடி­வெ­டுக்­கி­றார்­கள். இது­குறித்து கேள்­விப்­படும் ஆராய்ச்­சி­யா­ளர்­கள் அந்த ஊருக்கு வரு­கின்­ற­னர். அவர்­களில் சிலர் அடுத்­த­டுத்து மர்­ம­மான முறை­யில் இறந்­து­போ­கி­றார்­கள். படத்­தின் முடிவு எதிர்­பா­ராத ஒன்­றாக இருக்­கும்," என்­கி­றார் பெரு­மாள் வர­தன்.