ஹரிஷ்: உச்ச நட்சத்திரம் ஆக விரும்புகிறேன்

ஹரிஷ்: உச்ச நட்சத்திரம் ஆக விரும்புகிறேன்

2 mins read
f7c9f4b5-22de-458c-9b7d-3ccb7aa5d62f
-

ஒரே மாதி­ரி­யான கதா­பாத்­தி­ரங்­களில், தோற்­றங்­களில் நடிக்­கக் கூடாது என்­ப­தில் தாம் கவ­ன­மாக இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் ஹரிஷ் கல்­யாண்.

அதே சம­யம் தாடி­யு­டன் இருப்­ப­து­தான் தமக்­குப் பொருத்­த­மாக உள்­ளது என ரசி­கர்­கள் பலர் கூறி­ய­தா­கச் சொல்­கி­றார்.

அண்­மை­யில் வெளி­யீடு கண்ட 'ஓ மணப்­பெண்ணே' படத்­தில் தனது நடிப்பு நன்­றாக இருந்­த­தாக விமர்­ச­கர்­கள் பலர் பாராட்டி இருப்­பது மகிழ்ச்சி அளிப்­ப­தாக குறிப்­பி­டும் ஹரிஷ், மற்ற இளம் கதா­நா­ய­கர்­க­ளைப் போலவே தமக்­கும் 'மாஸ் ஹீரோ' ஆக வேண்­டும் என்ற ஆசை உள்­ளது என்­கி­றார்.

காதல் நாய­க­னா­கவோ, பக்­கத்து வீட்­டுப் பையன் என்ற தோற்­றத்­தில் தொடர்ந்து நடிப்­ப­தையோ தாம் விரும்­ப­வில்லை என்­றா­லும், அத்­த­கைய வாய்ப்­பு­கள்­தான் அதி­கம் தேடி வரு­வ­தாக கூறு­கி­றார் ஹரிஷ்.

"உச்ச நாய­க­னாக வர வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­வ­தில் தவ­றில்லை. ஆனால் அந்த இடத்­தைப் பிடிக்க பல வெற்றிப் ­ப­டங்­களில் நடித்­தி­ருக்க வேண்­டும் என்­பதை உணர்ந்­துள்­ளேன்.

"இது­வரை நடித்த படங்­களில் தாடி­யு­டன்­தான் அதி­கம் காணப்­ப­டு­கி­றீர்­கள் என்று பலர் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர். உண்­மை­யில் குறுந்­தா­டி­யு­டன் இருப்­ப­து­தான் என் தோற்­றத்­துக்கு அழ­காக, பொருத்­த­மாக உள்­ளது என்று நான் நம்பு­கி­றேன்," என்று சொல்­ப­வர், எதிர்­மறை, வில்­லன் வேடங்­க­ளி­லும் நடிக்க தயா­ராக உள்­ளா­ராம்.

"சில விஷ­யங்­க­ளைச் சோதித்துப் பார்க்­கத் தயங்­கக் கூடாது. இன்­றுள்ள முன்­னணி நடி­கர்­கள் எல்­லோ­ருமே இவ்­வாறு சில சோத­னை­களில் நிச்­ச­யம் ஈடு­பட்­டி­ருப்­பார்­கள். வில்­லன் கதா­பாத்­தி­ரம் வித்­தி­யா­ச­மா­க­வும் புதிய கதைக்­க­ளத்­து­ட­னும் அமைந்­தி­ருக்­கும் பட்­சத்­தில், அதில் நடிக்­கத் தயங்க மாட்­டேன்.

சசி­யின் பட வேலை­கள் துவங்­கி­விட்ட நிலை­யில், இள­னுக்கு தனுஷ் படத்தை இயக்­கும் வாய்ப்பு கிடைத்­துள்­ள­தாம். அத­னால் அந்­தப் படத்தை முடித்­து­விட்டு வரும் வரை ஹரிஷ் காத்­தி­ருக்க நேரும்.

கல்­லூரி மாண­வ­ராக நடிக்­கக் கேட்டு சிலர் அணு­கி­யுள்­ள­ன­ராம். ஹரி­ஷும் அதற்கு தயா­ரா­கவே உள்­ளார்.

"முன்­பெல்­லாம் கல்­லூ­ரியை மையப்­ப­டுத்­தும் கதை­களில் முன்­னணி நாய­கர்­கள் நடித்­துள்­ள­னர். கடந்த பத்­தாண்­டு­களில் 'சேது', 'காதல் தேசம்', 'மின்­னலே', 'சில்­லுனு ஒரு காதல்' போன்ற படங்­கள் தமி­ழில் வெளி­யா­க­வில்லை. எனவே, அது போன்ற படங்­களில் நடிக்க ஆவ­லாக உள்­ளேன்," என்று சொல்­லும் ஹரிஷ், 'ஆந்­தா­லஜி' வகைப் படங்­க­ளி­லும் நடிக்­கத் தயா­ராக உள்­ளா­ராம்.

"கல்­லூ­ரிக் கதை­கள் சில­வற்­றைக் கேட்­டுள்­ளேன். அவற்­றுள் ஏதே­னும் ஒரு கதை எனக்கு பொருத்­த­மாக இருக்­கும் எனத் தோன்­றி­னால் நடிப்­பேன்.

"உச்ச நட்­சத்­தி­ரம் ஆக வேண்­டும் என்ற ஆசை ஒரே நாளில் நிறை­வேறி விடாது என்­பதை அறி­வேன். வெற்­றிப் படங்­க­ளைக் கொடுக்க முயற்சி செய்­வேன்," என்­கி­றார் ஹரிஷ் கல்­யாண்.