சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள 'மாநாடு' தீபாவளிக்குத் திரைகாணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.
இந்நிலையில், அவரது ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளிக்குப் பிறகு 'மாநாடு' படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனவாம்.
தற்போது மும்பையில் நடைபெறும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் சிம்பு.
அதை முடித்த கையோடு சென்னை திரும்பும் அவர், 'மாநாடு' படத்தின் பின்னணிக் குரல் பதிவு வேலையை முடித்துக்கொடுக்கிறார். அதையடுத்து, 'வெந்து தணிந்தது காடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே, அவரும் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் 'பத்து தல' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
முதலில் கௌதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். டிசம்பர் 1ஆம் தேதி சிம்புவும் கௌதமும் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து சிம்புவின் படங்கள் வேகமாக வளர்ந்து வருவதும் சிம்பு இடைவெளி இன்றி நடித்து வருவதும் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

