'அண்ணாத்த' படத்தின் முதல் நாள் வசூல் முப்பத்து ஐந்து கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் 'மாஸ்டர்' பட வசூல் முறியடிக்கப்பட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
ஆனால் விஜய் ரசிகர்கள் வேறு கணக்கு காட்டுகிறார்கள்.
இந்நிலையில் 'அண்ணாத்த' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.24 கோடிதான் என்று சினிமா விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் 'மாஸ்டர்' படத்தை முதல் நாள் வசூலில் ரஜினி முந்திவிட்டது உண்மைதான் என்கிறார்கள் விமர்சகர்கள்.
படம் தொடர்பாக வெளிவந்துள்ள விமர்சனங்கள் காரணமாக, அடுத்தடுத்த தினங்களில் 'அண்ணாத்த' வசூல் மெல்ல சரிவு காணும் என்றும் ஒட்டுமொத்த லாபக்கணக்குகளைப் பார்க்கும்போது 'மாஸ்டர்' படம்தான் முதலிடத்தில் இருக்கும் என்று வாதிடும் விஜய் ரசிகர்கள், சில புள்ளி விவரங்க ளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.