ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பொன். மாணிக்கவேல்' (படம்) நேரடியாக இணையத்தில் வெளியாகிறது.
நவம்பர் 19ஆம் தேதி படம் முன்னணி 'ஓடிடி' தளத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா நடித்துள்ளார். இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார்.
சண்டைக்காட்சிகள், நகைச்சுவை எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப் படம் உருவாகி உள்ளது.