நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டான்' திரைப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியாகி உள்ளது.
அப்படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அச்சுவரொட்டியை வெளியிட்டார்.
சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாலசரவணன், சிவாங்கி, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
நகைச்சுவையும் சண்டைக்காட்சிகளும் நிறைந்த படமாக உருவாகி உள்ளது 'டான்'. அதனால் ரசிகர்கள் மத்தியில் இப்போதே படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லைகா நிறுவனமும் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளது. எனவே படம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.