வில்லனாக களமிறங்கும் ஜெய்

வில்லனாக களமிறங்கும் ஜெய்

1 mins read
d8d1aa1d-8158-425c-95fb-25273eff4886
-

இயக்­கு­நர் பத்ரி இயக்­கத்­தில் 'பட்­டாம்­பூச்சி' என்ற படத்­தில் நடி­கர் ஜெய் வில்­ல­னாக நடிக்க ஒப்­பந்­தம் ஆகி­யி­ருக்­கி­றார்.

ஒரு படத்­தில் நாய­கனை நிலை­நி­றுத்த வேண்­டு­மென்­றால் அதற்குச் சரி­யான பல­மான எதிரி வேண்­டும். ஒரு நாய­கன் யாரு­டன் மோதி வெற்றி பெறு­கி­றார் என்ற வர­லாறு சினி­மா­வில் முக்­கி­யம். சாதா­ர­ண­மான, பல­மில்­லாத எதி­ரியை வீழ்த்தி

நாய­கன் வெற்றி பெறு­கி­றார் என்­றால் அந்­தப் படம் வெற்­றிப் படங்­க­ளின் பட்­டி­ய­லில் இணைந்­தது இல்லை.

80களில் முன்­னணி நடி­கர்­கள் நாய­கர்­க­ளாக மட்­டுமே நடித்து வந்­த­னர். வில்­லன் வேடங்­களில் நடித்­ததே கிடை­யாது. அது

தற்­பொ­ழுது மாறி இருக்­கிறது. நாய­க­னுக்கு ஈடுகொடுக்­கும் வகை­யில் முன்­னணி நாய­கர்­களும் வில்­லன்­க­ளாக கள­மி­றங்கி சாதித்து வரு­கின்­ற­னர்.

நாயகன் என்ற பிம்­பத்தை முத­லில் உடைத்­

தெ­றிந்­த­வர் அர­விந்த் சாமி. இவர் 'தனி ஒரு­வன்' படத்­தில் வில்­ல­னாக நடித்து அசத்தி இருந்­தார். அடுத்து கார்த்­திக் 'அனே­கன்' படத்­தி­லும் ராணா

டகு­பதி 'பாகு­பலி' படத்­தி­லும் விஜய் சேது­பதி 'மாஸ்­டர்' படத்­தி­லும், உலக நாய­கன் கமல் நடிக்­கும் 'விக்­ரம்' படத்­தில் நான்கு முன்­னணி நடி­கர்­களும் வில்­லன்­களாக நடிக்­கின்­ற­னர்.

'பட்டாம்பூச்சி' மூலம் ஜெய் வில்லனாக சிறகடித்துப் பறப்பார் என்கிறது படக்குழு.