நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகனும் நடிகருமான அல்லு அர்ஜுன் அண்மையில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்திருந்தார்.
அதில் கூட்டநெரிசலில் அரசுப் பேருந்தில் செல்வதற்கு பதில் இந்த பைக், டாக்சியில் செல்லலாம் என்பதுபோல் வசனம் அமைந்துள்ளது. இந்த வசனம்தான் தற்போது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
"தொழிலாளர்கள் பைக், டாக்சி எடுத்துச் செல்வது இல்லை. அவர்கள் பெரும்பாலும் பேருந்துகளில்தான் பயணம் செய்கிறார்கள். நடிகர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். பேருந்து போக்குவரத்து பற்றி அல்லு அர்ஜுன் இழிவாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையென்றால் சட்டப்படி இதனை எதிர்கொள்வோம்," என்று தெலுங்கானா அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழக ஆணையர் சஜ்ஜனார் போர்க்கொடி தூக்கியுள்ளார்.