பாலிவுட்டில் முன்னணி நடிகையான வித்யாபாலனும் தெலுங்கில் முன்னணி நடிகையான இலியானாவும் இணைந்து ஒரு இந்திப் படத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்திப் படங்களில் நடிக்கும் ஆசையால் தெலுங்குத் திரையுலகை ஒதுக்கிவிட்டு பாலிவுட்டுக்குச் சென்று ஓரிரு படங்களோடு திரும்பியவர் இலியானா.
இவர்களுடன் 'தி ஸ்கேம்' 1992 புகழ் நடிகர் பிரதீக் காந்தி, அமெரிக்க இந்திய நடிகரான செந்தில் ராமமூர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்கள் நால்வரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வலைத்தளத்தில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த இந்திப் படம் தடைகளற்ற நவீன மனித உறவுகள் பற்றி அலசுகிறது.

