அண்மையில் அருகருகே படப்பிடிப்புத் தளங்களில் இருந்த நடிகர் சூர்யாவும் விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். ஆனால் ஏன் அவர்கள் இருவரும் இணைந்து படம் எடுத்துக் கொள்ளவில்லை என்று இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் கேட்ட கேள்விக்கு தற்பொழுது பதில் கிடைத்து இருக்கிறது. அவர்கள் இருவரும் அவரவர் நடிக்கும் படங்களின் வேடங்களில் இருந்ததால் படம் எடுத்துக்கொண்டால் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதால் இருவரும் படம் எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.
மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படம் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார்.
"90களில் ரஜினி நடிக்கும் படங்கள் மார்ச் மாதத்தில் துவங்கப்பட்டு அந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்படும்.
"காலம் குறைவாக இருப்பதால் பின்னணி இசையும் பாடல்களையும் விரைவில் செய்து தரும்படி வற்புறுத்துவார்கள்.
"அடிக்கடி மின்தடை செய்யப்படும் ஏரியாவில் எனது ஸ்டூடியோ இருந்ததால் ஜெனரேட்டர் உதவியுடன் பல இரவுகள் தூங்காமல் ரஜினி படத்திற்காக உழைத்திருக்கிறேன் அந்த காலங்கள் நரகம்," என்று கூறியிருக்கிறார்
ஏ.ஆர்.ரஹ்மான்
மற்ற நடிகர்களைவிட ரஜினிகாந்த் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதாயிற்று என்றும் இது சில நேரங்களில் தன் மீது எரிச்சலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.