அறிவியலும் கற்பனையும் கலந்த 'ஜாங்கோ'

அறிவியலும் கற்பனையும் கலந்த 'ஜாங்கோ'

2 mins read
78640ebc-3773-4dd2-a291-1c39b7873e0a
'ஜாங்கோ' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. -

அறி­வி­ய­லை­யும் கற்­ப­னை­யை­யும் சரி­யான விகி­தத்­தில் கலந்து உரு­வாகி உள்­ளது 'ஜாங்கோ'. மனோ கார்த்­தி­கே­யன் இயக்கி உள்­ளார்.

'முண்­டா­சுப்­பட்டி' ராம்­கு­மார், 'இன்று நேற்று நாளை' ரவிக்­கு­மார், 'மர­கத நாண­யம்' ஏ.ஆர்.கே.சர­வ­ணன் எனத் தமி­ழ­கத்­தின் திருப்­பூர் நக­ரில் இருந்து கோடம்­பாக்­கத்­துக்கு வந்து சாதித்­த­வர்­க­ளின் பட்­டி­ய­லில் இவ­ரது பெய­ரும் இடம்­பெ­றக்­கூ­டும்.

நிறைய திகில் கதை­கள் வந்­த­வண்­ணம் இருப்­ப­தால் அவற்­றில் இருந்து மாறு­பட்ட படைப்பை உரு­வாக்க வேண்­டும் என்று முடிவு செய்­தா­ராம் மனோ.

"அப்­போ­து­தான் காலச்­சக்­க­ரத்தை மைய­மாக வைத்து ஒரு படத்தை இயக்­க­லாம் எனத் தோன்றி­யது. அப்­போ­து­தான் இந்­தக் கதையை உரு­வாக்­கி­னேன். ஆனால் நான் நினைத்­த­து­போல் அவ்­வ­ளவு எளி­தாக திரைக்­கதையை அமைக்க முடி­ய­வில்லை.

"இப்­ப­டிப்­பட்ட கதை எல்­லோ­ருக்­கும் புரி­யுமா என்று யோச­னை­யாக இருந்­தது. ஆனால் நண்­பர்­கள் சில­ரி­டம் கதையை விவ­ரித்­த­போது மிக­வும் நன்­றாக இருக்­கிறது என உற்­சா­கம் அளித்­த­னர்.

"எனி­னும் இப்­ப­டிப்­பட்ட ஒரு கதையை தயா­ரிக்க யார் முன்­வரு­வார்­கள் என்று அடுத்த கேள்வி எழுந்­தது. அப்­போது தயா­ரிப்­பா­ளர் சி.வி.குமாரை சந்­திக்கும் வாய்ப்பு கிடைத்­தது. அவரைச் சந்­தித்­துக் கதை­யைச் சொன்­ன­போது, என் நம்­பிக்கை வீண் போக­வில்லை. அடுத்த நிமி­டமே இந்­தக் கதை­யைப் பட­மாக்­கத் தயார் என்று கூறி­விட்­டார்," என்­கி­றார் மனோ கார்த்­தி­கே­யன்.

சரி... இந்­தக் கதை­யில் அப்­படி­யென்ன சுவா­ர­சி­யம் உள்­ள­தாம்?

"கால­சக்­க­ரத்தை மைய­மாக வைத்து இது­வரை வெளி­வந்த படங்­களில் நீங்­கள் ஒன்றை கவனித்­தி­ருக்­க­லாம். ஒரே கால­கட்­டத்­துக்­குள் அல்­லது ஒரே சம்­ப­வத்­துக்­குள் ஒரு­வர் அல்­லது பலர் சிக்­கிக் கொள்­வது போன்­று­தான் கதை இருக்­கும்.

ஆனால் இப்படத்தின் நாய­கன் திரும்­பத் திரும்ப ஒரே நாளுக்­குள்­ளேயே வாழ்ந்து கொண்­டி­ருப்­பார். அந்த ஒரு நாளில் என்­ன­வெல்­லாம் நடக்­கிறது, ஏன் நடக்­கிறது என்­பதை அறி­வி­யல்­பூர்­வ­மா­க­வும் கொஞ்­சம் கற்­ப­னை­யும் கலந்து சொல்கிறோம்," என்­கி­றார் மனோ.

'ஜாங்கோ' என்றால் ஜெர்மானிய மொழியில் 'மீண்டும் எழுவேன்' என்று அர்த்தமாம்.