தீபாவளிப் படங்களின் வசூல் நிலவரம்

தீபாவளிப் படங்களின் வசூல் நிலவரம்

1 mins read
1d9f72ed-811d-43bd-a382-10fb332949c6
'எனிமி' பட சுவரொட்டியில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ். -

தீபா­வ­ளிக்கு வெளி­யீடு கண்ட படங்­க­ளின் வசூல் குறித்து சமூக வலைத்­த­ளங்­களில் பல­வி­த­மான தக­வல்­கள் உலா வரு­கின்­றன. ஆனால் உண்மை நிலை வேறு என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.

இம்­முறை தீபா­வ­ளிக்கு ரஜி­னி­யின் 'அண்­ணாத்த', 'விஷால்', ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' ஆகிய இரு படங்­கள்­தான் பெரும்­பா­லான திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கின.

வேறு பெரிய படங்­கள் இல்­லாத கார­ணத்­தால் உலக அள­வில் இரு படங்­களும் வசூ­லைக் குவிக்­கும் என்ற எதிர்­பார்ப்பு நில­வி­யது.

இதற்­கேற்ப 'அண்­ணாத்த' முதல் நாளன்றே ரூ.35 கோடி வசூல் கண்­ட­தாக தக­வல் வெளி­யா­னது. இரண்­டா­வது வசூ­லும் மன­நி­றைவு தந்­த­தாக தயா­ரிப்­புத் தரப்­பில் கூறப்­பட்­டது. இதே­போல் 'எனிமி' படக்­கு­ழு­வி­ன­ரும் மகிழ்ச்­சி­யில் இருப்­ப­தாக விஷால் ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், 'அண்­ணாத்த' நேற்று முன்­தி­னம் வரை ரூ.200 கோடி வசூல் கண்­டுள்­ள­தா­க­வும் 'எனிமி' ரூ.20 கோடி வசூ­லைத் தந்­துள்­ள­தா­க­வும் தக­வல் பரவி­யுள்­ளது. ஆனால் இரு படங்­களும் வெளி­யான மூன்­றா­வது நாளன்றே தமி­ழ­கத்­தின் பெரும்­பா­லான பகு­தி­களில் பலத்த மழை பெய்­யத் தொடங்­கி­விட்­டது. சென்­னையை ஒட்­டு­மொத்­த­மா­கப் புரட்­டிப் போட்டு­விட்­டது கன­மழை. மக்­கள் வீடு­களை விட்டு வெளியே வராத நிலை­யில் எப்­படி கோடிக்­க­ணக்­கில் வசூல் ஆகி இருக்­கும் என ஒரு தரப்­பி­னர் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர். இரு படங்­க­ளின் தயா­ரிப்­புத் தரப்­பில் இருந்­தும் வசூல் குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.