கொரோனா புண்ணியத்தால் முன்னணிக் கலைஞர்களுடன் அடிக்கடி சமூக வலைத்தளங்கள் மூலம் பேசக்கூடிய வாய்ப்பு ரசிகர்களுக்கு அமைகிறது.
அந்த வகையில் அண்மையில் ரசிகர்களுடன் உரையாடி உள்ளார் 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே.
வழக்கம்போல் இந்தச் சந்திப்பின்போது ஒரு ரசிகர், அந்தக் காலம் முதல் கேட்கப்பட்டு வரும், "உங்கள் அழகின் ரகசியம் என்ன" என்று கேட்டுள்ளார். அதற்கு பூஜா அளித்த பதில்தான் சுவாரசியமானது.
"நாம் அழகாக இருக்க பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை. பிறரது உதவியும் வேண்டாம். தினமும் காலையும் மாலையும் தவறாமல் உடற்பயிற்சியும் யோகாவும் செய்து பாருங்கள். நமக்குள் இருக்கும் அழகு தன்னால் வெளிப்படும்," என்று பதிலளித்துள்ளார் பூஜா.
அவரும் இதைத்தான் தினமும் செய்கிறாராம். படப்பிடிப்பின்போது கூட உடற்பயிற்சி செய்யத் தவறியதில்லை என்கிறார்.