ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவும் நல்ல காரியத்தைச் செய்து வருகிறார் சமந்தா.
இந்நிலையில், தெலுங்கு நடிகை தேஜஸ்வி மதுவாடாவின் அறுவை சிகிச்சைக்கு சமந்தா உதவியது இப்போது தெரியவந்துள்ளது. இது குறித்து தேஜஸ்வியே தகவல் வெளியிட்டுள்ளார்.
"சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்டேன். மதுவுக்கு அடிமையான தந்தையின் கவனிப்பு இன்றி அனாதையாக வளர்ந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகும் பல்வேறு சிரமங்கள் இருந்தன. இந்நிலையில் காசநோய் தாக்கியது. பின்னர் ஓர் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கான பணம் இல்லாமல் சிரமப்பட்டபோது, சமந்தா பணம் தந்து உதவினார்," என்று தேஜஸ்வி கூறியுள்ளார்.

