'இதென்ன வாழ்க்கை... வெறுத்துப் போய்விட்டது, சலிப்பாக இருக்கிறது' என்றெல்லாம் சொல்லக்கூடாது என்கிறார் திரிஷா (படம்).
அவரைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஓர் அற்புதம் என்றும் அதை அனைவரும் ஆசை தீர அனுபவிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.
"விரக்தி, சலிப்பு என்று பல விஷயங்கள் நம்மை பாதிக்கலாம். ஆனால் அவற்றைக் கடந்து செல்ல வேண்டும்," என்கிறார் திரிஷா.
'சதுரங்க வேட்டை 2', 'ராங்கி,' 'கர்ஜனை' ஆகிய மூன்று படங்களில் இவர் நடித்து முடித்துள்ளார். எனினும் அவை மூன்றுமே இன்னும் வெளியீடு காணவில்லை.
விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.
கடந்த வாரம் ஏற்பாடுகள் முடிந்து படப்பிடிப்பை தொடங்க இருந்தபோதுதான் மழை, வெள்ளம் என சூழ்நிலையே மாறிப்போனது.
இப்போது மழை முடிவுக்கு வந்துள்ளதால், பல இடங்களில் வெள்ளம் வடியட்டும் எனக் காத்திருக்கின்றனராம். அநேகமாக இந்தவார இறுதிக்குள் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கக்கூடும்.
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் (படம்) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இளையர்களை வெகுவாகக் கவர்ந்த 'லுங்கி டான்ஸ்' பாடலுக்கு அவர் நடனமாடியது அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது. அதிலும் நீச்சல் உடையுடன் நடனமாடி உள்ளார் என்பது இந்த வரவேற்புக்குக் காரணம்.
ஏராளமான இளம் ரசிகர்கள் ஜான்வியின் நடனம் நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதாகவும் அதற்கு சிம்புதான் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியானது.
பிறகு படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல எனப் படத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.
இதற்கிடையே மும்பையில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பைத் துவங்கி உள்ளனர். இடைவிடாமல் 25 நாள்கள் நடக்கும் படப்பிடிப்புடன் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டு விடும் என்கிறார் இயக்குநர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இணைந்து நடிக்கும் 'சாணிக்காயிதம்' நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. அநேகமாக பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகக்கூடும்.

