இதுவரை எந்த நடிகையும் நடிக்கத்
தயங்கும் ஒரு வேடத்தில் நடிக்க
இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். அந்த வேடத்தில் நடிக்கவேண்டாம் என்று பலர் கூறியும் தைரியமாக களமிறங்க இருக்கும் அவரை சக நடிகைகள் பாராட்டி வருகின்றனர்.
மிகவும் சவாலான வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்,
தற்போது இந்தியில் நடித்து வரும் திரைப்படம் 'சத்ரிவாலி'.
இந்தப் படத்தில் ரகுல் ஆணுறை சோதனையாளராக வருகிறார். படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த நிலையில், தற்போது இந்தப்
படத்தின் முதல் சுவரொட்டியை படக்குழு வெளியிட்டுள்ளது.
ரகுல் ப்ரீத் சிங், கதையின்
நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் தொடங்கியது.
குடும்பத்தோடு அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்து
மகிழும் அளவிற்கு எடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
இந்தப் படத்தில் வேதியல் படித்துவிட்டு, வேலை தேடும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு எந்த வேலையும் கிடைக்காததால் ஆணுறை சோதனையாளராக வேலையில் சேர்
கிறார். இப்படிப்பட்ட வேலை செய்கிறோம் என்று தெரிந்தால்
நண்பர்களும் குடும்பத்தினரும் என்ன நினைப்பார்கள் என, தனது வேலையின் அடையாளத்தை மறைக்க இவர் செய்யும் விஷயங்கள் உச்ச கட்ட நகைச்சுவையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதுவரை யாரும் நடித்திராத ஒரு சர்ச்சையான, அதே நேரத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், மிகவும் ஆர்வமாக இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுபங்களிப்போடு நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் சுவரொட்டியில் ரகுல் ப்ரீத் சிங் கையில் ஆணுறை வைத்தபடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சுவரொட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழில் வெளியான 'தாராள பிரபு' படத்தின் இந்தி மறுபதிப்புப் படமான 'விக்கி டோனர்' படத்தில் விந்து தானம் குறித்த சர்ச்சைக்
குரிய கதையை நகைச்சுவை கலந்து படமாக்கி இருப்பார்கள்.
அந்தக் கதையைப்போலவே இந்தப் படமும் இருக்கும் என்றும் முகம் சுளிக்கும் அளவுக்கு இருக்காது என்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என இந்திய அளவில் ஏகப்பட்ட மொழிப்
படங்களில் முன்னணி நடிகையாக நடித்து
வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
கன்னடத்தில் வெளியான 'கில்லி' படத்தில்தான் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் 'யுவன்', 'தடையற தாக்க' மற்றும்
'புத்தகம்' உள்ளிட்ட படங்களில் நடித்து அறிமுகமானார்.
மகேஷ் பாபுவின் 'ஸ்பைடர்', கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' மற்றும் 'தேவ்', நடிகர் சூர்யாவுடன் 'என்ஜிகே' என முன்னணி
நாயகர்களுடன் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்திலும் நடித்து வருகிறார்.
'இன்று நேற்று நாளை' பட இயக்குநரின் 'அயலான்' திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்துள்ள இந்தப்
படம் சில காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், அடுத்தடுத்து பாலிவுட் படங்
களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக 'டாக்டர் ஜி', அனுபூதி காஷ்யப் இயக்கும் ஒரு படத்தில் 'டாக்டர் பாத்திமா' என்கிற வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.