'எதற்கும் துணிந்தவன்' படத்தில் பணி
புரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஒரு கோடி ரூபாய்
மதிப்பிலான தங்க நாணயங்களைப் பரிசாக வழங்கியுள்ளார் சூர்யா.
'சூரரைப் போற்று' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா இயக்
குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் வெளியான சூர்யாவின் 'ஜெய் பீம்' படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் 'எதற்கும் துணிந்தவன்' படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் சூர்யா.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் இந்தப் படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.
இவர் 'டாக்டர்' திரைப்படத்தில்
சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி
உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போது 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் குரல் பதிப்பு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தங்க
நாணயங்கள் பரிசுகளாக சூர்யா கொடுத்துஉள்ளதாகவும் அதன் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு கோடி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாண்டிராஜ் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.
இதனிடையில் பாலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

