'சீயான்' என்று செல்லமாக அழைக்கப்
படும் விக்ரமும் த்ருவும் சேர்ந்து நடித்திருக்கும் படம் 'மகான்'. இந்தப் படத்தை அமேசான் பிரைமுக்கு விற்றுவிட்டார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால் விக்ரமின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
விக்ரம் நடித்த படத்தைத் திரையரங்கில் பார்க்கவே ரசிகர்கள் விரும்புவர். பட விற்பனையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைத்துத்
தரப்பினருக்கும் அதுவே மகிழ்ச்சி தரும் விஷயம்.
'மகான்' படத்தில் விக்ரமுடன்
அவரது மகன் த்ருவும் நடித்துள்ளார். தந்தை, மகன் நடிக்கும் படத்தை திரை
அரங்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தார்கள். ஆனால், கார்த்திக் சுப்புராஜின் எண்ணம் வேறு மாதிரி
உள்ளது.
பெரும் பொருட்செலவில் கார்த்திக் சுப்புராஜ் இறுதியாக இயக்கிய 'ஜகமே தந்திரம்' நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியானது. தனுஷ் நாயகனாக நடித்திருந்தார்.
படத்தைப் பார்த்த அனைவரும் எதிர்மறை விமர்சனங்களைத் தந்தனர். திரையரங்கில் வெளியாகியிருந்தால் நிச்சயம் அந்தப் படம் தோல்வி கண்டிருக்கும்.
தயாரிப்பாளர் பல கோடிகள் நஷ்டத்தை சந்தித்திருப்பார். 'ஓடிடி'யில் வெளியானதால் தயாரிப்பாளருக்கு கணிசமான லாபம் கிடைத்தது.
விஷாலின் 'எனிமி' படத்தையும்
'ஓடிடி'யில் வெளியிடவே முதலில் முடிவு செய்திருந்தனர். படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது பேசிய விஷால், நல்ல லாபத்துக்கு படத்தை 'ஓடிடி'யில் வெளியிட்டிருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர்தான் இந்தப் படத்தை திரை
யரங்கில்தான் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து வெளியிட்டார் என்றார்.
அதாவது தயாரிப்பாளர் இந்த முடிவு ஆபத்து என்று தெரிந்திருந்தும் முடிவெடுத்தார் என்றார். அது உண்மையாகிப் போனது. படம் தோல்வி.
'ஓடிடி'யில் வெளியிட்டிருந்தால் லாபம் பார்த்திருக்கலாம்.
'மகான்' படத்துக்கும்
அப்படியொரு முடிவை எடுக்க வேண்டுமா என தயாரிப்பாளர் லலித் குமார் யோசித்து, படத்தை 'ஓடிடி'யில் வெளியிடும்
எண்ணத்தில்தான் அவர் இப்போதுவரை இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி தொடக்கத்தில் 'மகான்' அமேசான் பிரைமில் வெளியாகலாம் என்பதே இன்றைய நிலை.
இந்தப் படத்தில் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
'மரைக்கார்' படம் 'ஓடிடி'யில் வெளியாக ஒப்பந்தமானபின் அரசின் தலையீட்டால் திரையரங்கில் வெளியாக
இருப்பதுபோல் 'மகான்' படத்திற்கும் ஏதாவது அதிசயம் நடக்காமலா போகும் என்கின்றனர் விக்ரமின் ரசிகர்கள்.

