திரைத் துளி­கள்

நெல்சன் இயக்கி வரும் 'பீஸ்ட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விஜய் இந்தப் படத்தை முடித்ததும் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66ஆவது படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் அடுத்ததாக விஜய்யின் 67ஆவது படத்தை 'மாஸ்டர்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் அந்தப் படத்தை 'துப்பாக்கி' படத்தைத் தயாரித்த எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் 'பீஸ்ட்' படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமாக வணிக வளாகம் போன்ற அரங்கு அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பைத் தொடங்கினர். ஆனால், சென்னையில் தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த மழையில் அந்த அரங்கைச் சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. அதனால் தற்காலிகமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு.

தமிழில் முன்னணி இயக்குநராக உயர்ந்த அட்லீ, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, ஷாருக்கான் படத்தை இயக்குவதற்காக மும்பை, சென்னை என பறந்து கொண்டிருக்கிறார். ஒரு வழியாக கடந்த ஆகஸ்ட் மாதம் புனேயில் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இதனிடையே, தனது மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பைத் தள்ளி வைத்தார் ஷாருக்கான். அதற்குள் படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றும் நீக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், நயன்தாரா படத்திலிருந்து விலகவில்லை என்றும் அவர் படத்தில் போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்திப் படங்களைப் பொறுத்தவரையில் எந்த ஒரு தகவலையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அங்குள்ள நாயகர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும். தற்போது வரை படத்திலிருந்து நயன்தாரா விலகல் குறித்து எந்த ஓர் அதிகாரபூர்வ அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. அதுவரையில் நயன்தாராதான் படத்தின் கதாநாயகி. இந்தப் படத்தில் நடிப்பதற்காகவே நயன்தாரா மேலும் உடல் இளைத்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.

காதலுக்குக் கண்ணில்லை என்பதைத்தான் நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், 'சுல்தான்' கதாநாயகி ராஷ்மிகா மந்தனா காதலுக்கு வயதில்லை என்ற புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் ராஷ்மிகாவிடம், "உங்களைவிட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா?" எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு ராஷ்மிகா, "நம்மைவிட இளையவரைக் காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது? காதலுக்கு வயதோ மொழியோ தடையில்லை. அவர் நமது எண்ணங்களை மாற்றாதவராக, நம்மிடம் ஆதிக்கம் செய்யாதவராக இருக்கவேண்டும்," என்று அதிர்ச்சி விளக்கம் அளித்துள்ளார். ராஷ்மிகாவுக்கு முன்பு கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருவருமே அதை ரத்து செய்தனர். அதன்பிறகு தான் தெலுங்கில் மும்முரமாக நடிக்கத் தொடங்கினார் ராஷ்மிகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!