‘ஆரோக்கிய உணவும் உடற்பயிற்சியும் அவசியம்’

'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய அழகின் ரகசியம் குறித்து மனம் திறந்துள்ளார். தான் அதிகமான நேரத்தை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுவதாகவும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதாகவும் அதனால்தான் 8 ஆண்டுகளுக்கு முன் பார்த்ததுபோலவே இன்றும் இளமையுடன் காணப்படுவதாகவும் கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.

மிஸ்கின் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு நடிகர் ஜீவா 'சூப்பர் ஹீரோ'வாக நடித்திருந்த திரைப்படம் 'முகமூடி'. இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதில் கதாநாயகியாக முதல் முறையாக திரைத்துறையில் பூஜா ஹெக்டே அறிமுகப்படுத்தப்பட்டார்.

முதல் திரைப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைய அடுத்ததாக தமிழ்ப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக தமிழ் சினிமா பக்கம் தலையே வைத்துப் பார்க்காத பூஜாவுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'அலா வைகுண்டபுரம்லோ' மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு இப்பொழுது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இயக்கிய இரண்டே திரைப்படங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'டாக்டர்' திரைப்படம் பல மடங்கு வசூலை வாரி குவித்து வருகிறது.

'டாக்டர்' வெற்றிக்குப் பிறகு நெல்சன் இயக்கும் 'பீஸ்ட்' நகைச்சுவை கலந்த சண்டைப் படமாக உருவாகி வருகிறது. மேலும் இந்தப் படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த 'பீஸ்ட்' படப்பிடிப்பு இப்போது மீண்டும் சென்னையில் நடைபெற இருக்கிறது. மழைக்கு முன்பு பூஜா ஹெக்டே படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் மும்முரமாக காணப்படுகிறார் பூஜா ஹெக்டே. இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெள்ளை உடையில் தேவதையைப் போன்று காட்சி அளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

மேலும் தான் நடிக்கும் படங்களின் விவரங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் 'இவ்வளவு அழகா இருந்தா கடத்திக்கிட்டு போகத் தோணுமே' என பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய விடுமுறைக் கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடுக்கடலில் படகில் செல்வது போன்ற படமும் நீச்சல் குளத்தில் சாப்பிட்டுக்கொண்டே நீந்துவது போன்ற படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

படங்களைப் பார்த்த ரசிகர்கள், "இத்தனை அழகுடன் காணப்படுவதற்கு என்ன காரணம்?" என்று கேட்டதற்கு, தொடர்ந்து உடற்பயிற்சியும் ஆரோக்கிய உணவுமே என் அழகிற்கு காரணம். மேலும் உடற்பயிற்சிக் கூடத்தில் 'பிலாடேஸ்' பயிற்சியையும் யோகாவையும் தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், திருமணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டதற்கு, "திருமண வயது வந்துவிட்டது என்பதற்காகவோ அல்லது திருமணம் செய்துகொள்ள இதுதான் சரியான நேரம் என்பதற்காகவோ திருமணம் செய்துகொள்வது கண்டிப்பாகச் சரியல்ல.

"வாழ்க்கை எல்லாம் சேர்ந்து இருக்க முடியும் என ஒரு மனிதரோடு இருக்கும்போது தோன்றினால் மட்டுமே அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அவர்தான் வாழ்க்கைக்கு நல்ல கணவராக இருப்பார்," என்று கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.

தமிழ்த் திரையில் மீண்டும் தன்னுடைய வரவை நல்ல வரவாக மாற்ற 'பீஸ்ட்' படத்தை முழுவதும் நம்பி இருக்கிறார் பூஜா ஹெக்டே.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!