சந்தானம் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள 'சபாபதி' படத்தின் சுவரொட்டியால் சர்ச்சை வெடித்துள்ளது.
'தண்ணீர் திறந்துவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்' என எழுதப்பட்டுள்ள சுவரின் மீது சந்தானம் சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படம் அந்தச் சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது.
இது சமூக நலனுக்காகப் போராடும் போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். எனவே இந்தச் சுவரொட்டியை திரும்பப் பெறவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.