'ஜெய் பீம்' திரைப்படத்தின்
உண்மையான நாயகன்
வழக்கறிஞராக இருந்து பின்பு நீதிபதியானவர் சந்துரு.
அவரைத் திரையில் பிரதி
பலித்த நாயகன் சூர்யா. இந்தப் படத்தில் சில காட்சிகள் ஒரு சமூகத்தை மறைமுகமாக தாக்கி இருப்பதாக சர்ச்சைக்குஉள்ளானது. அதனால் அந்த காட்சிகள் மாற்றியமைக்கப்
பட்டும் தொடர்ந்து சூர்யாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி
இருக்கிறது. அதனால் திரையுலகத்தினர் பலரும் ஒன்று சேர்ந்து சூர்யாவிற்கு ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர்.
சில காட்சிகள் நீக்கப்பட்ட போதிலும் 'ஜெய் பீம்' திரைப்பட விவகாரம் தொடர்பான சர்ச்சை அடங்கவில்லை. இந்நிலையில் நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று பாதிக்கப்பட்ட சமூகத்தினர் அறிவித்து இருந்தனர். அந்த சர்ச்சை முடிவதற்குள் சூர்யா, ஜோதிகா இருவரும் 24 மணி நேரத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்றும் சூர்யா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சூர்யாவிற்கு திரையுலகில் இருந்து முதலில் யாரும்
ஆதரவு தெரிவிக்காத நிலையில் நாளுக்கு நாள் இந்த
விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவதைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் சங்கம், திரைப்
பிரபலங்கள் என திரைத்துறையினர் பலரும் ஒன்று சேர்ந்து தங்களது ஆதரவை சூர்யாவிற்கு தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து
வருகின்றனர்.
அந்த வரிசையில் வெற்றி மாறன், "இத்தகைய படங்கள் மூலம் சமூக நீதி ஏற்படக்
கூடாது என விரும்புவோருக்குப் பதற்றத்தை ஏற்படுத்துவது இயல்பே.
"சமூகத்தில் நிலவும் பேதங்
களையும் அநீதிகளையும் கேள்வி கேட்கும் திரைப்படங்களும் கூட சமூக நீதி ஆயுதங்களே. ஆகையால் நாங்கள் 'ஜெய் பீம்' படக்குழுவுடன் எப்போதும் ஆதரவாக நிற்போம்," என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, "பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம்
மக்களை நல்வழிப்படுத்தவே முயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்திரிக்கப்படு
கிறான். கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும்போது அதைப் படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் பூதக்கண்ணாடியை அணிந்து கொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காகப் பேசாமல் முடங்கிவிடும்.
"இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான். அன்று என் 'வேதம் புதிது' படத்தை முடக்க முயற்சித்தபோது புரட்சித்
தலைவர் உடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அதுபோன்றதொரு படைப்புதான் 'ஜெய் பீம்' படமும். இதைப் படைப்பாக மட்டுமே பார்க்கவேண்டும்.
"தம்பி சூர்யாவைப் பொறுத்த
வரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மைக் கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர்.
"ஓர் இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும் தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர். அவருக்கு
எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு பார்ப்பவர் அவர் அல்ல. தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்
பவர்.
"ஓர் அலைபேசியில் முடிந்
திருக்க வேண்டியதும் சிறு
தவறுகளைச் சுட்டிக்காட்டித் தீர்க்க வேண்டியதுமான இந்தப் பிரச்
சினையை எதிர்காற்றில் பற்றி எரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை. எப்போதும் நட்போடு பயணப்படுவோம்," என்று பதிவிட்டுள்ளார்.
இவரைப்போல பலரும் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில்
சூர்யாவு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் நவம்பர் 19ஆம் தேதி சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'சபாபதி' திரைப்
படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது, "திரைப்படங்களில் ஒருவரை உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதற்காக யாரையும் தாழ்த்துவது முறையானது அல்ல," என்று பேசியிருப்பது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போது இணையத்தில் சந்தானத்தின் 'பஞ்ச்' வசனங்கள் மூலமாகவே அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
1993ஆம் ஆண்டில் ராஜாக்கண்ணு கொலை தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் சாராம்சமே 'ஜெய் பீம்' திரைப்படம்.
13 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 2006ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முக்கிய அங்கம் வகித்த சந்துரு என்ற வழக்கறிஞர்தான் இந்தக் கதையின் உண்மை கதாநாயகன்.
பல்வேறு தரப்பினரின்
மிரட்டல்களையும் அதிகாரங்களையும் கடந்து அந்த வழக்கில் ராஜாக்கண்ணுவின் கொலைக்கு நீதி பெற்றுக் கொடுத்தது வழக்கறிஞர் கே.சந்துருவின் வாதங்களே.
இவரின் செயல்பாடுகள் மற்ற நீதியரசர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே இருந்து வந்துள்ளது.
ராஜாக்கண்ணு வழக்கு குறித்த இவரது தகவல்களே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று தமிழ்த் திரைப்பட இயக்குநர்களான
பாக்கியராஜ், பார்த்திபன், பிரபுதேவா உள்ளிட்டோர் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவைச் சந்தித்து பாராட்டு தெரிவித்து நினைவுப்
பரிசு வழங்கினார்கள்.
சமூக வலைத்தளங்களில்
சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் கருத்து
தெரிவித்து வருவதால் சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா
வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பை சென்னை மாநகரப் போலிஸ்
வழங்கியுள்ளது.
'நடிப்பில் ஆர்வத்துடன் இருந்த நடிகர் விஜய்காந்தை இப்படித்தான் உசுப்பிவிட்டு
அரசியலுக்கு வரவழைத்தார்கள். அதுபோலவே சூர்யாவையும் உசுப்பிவிட்டு அரசியலுக்குள் இழுத்துவிடப் போகிறார்கள்,' என்று ஒரு சிலர் ஆருடம் கூறி வருகின்றனர்.

