ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்'. 'டிவிவி' நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத்
தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் கடந்த சில மாதங்
களுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கான கட்டணத்தை ஆந்திர அரசாங்கம் அதிரடியாகக் குறைத்தது.
சிறிய நகரங்கள் ரூ.10 முதல்
ரூ.20, நகராட்சிகளுக்கு ரூ.30 முதல் ரூ.70, 'மல்ட்டிப்ளெக்ஸ்' திரை
அரங்குகளுக்கு ரூ.40 முதல் ரூ.120 என்று கட்டணம் நிர்ணயித்தது.
ஆந்திர அரசின் இந்த அறிவிப்புக்கு தயாரிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே கொரோனா அச்சுறுத்தலால் திரைப்படங்கள் வெளியாகாத சூழலில் இந்தக் கட்டணக் குறைப்பு தங்களைப் பெரிதும் பாதிக்கும் என்று அவர்கள் கவலை தெரிவித்து வந்தனர்.
பெரும் பொருட்செலவில் படம் தயாரித்து இருக்கும் 'ஆர்ஆர்ஆர்' பட நிறுவனம், "கட்டணக் குறைப்பு எங்கள் படத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பது உண்மைதான். ஆனால் நீதிமன்றம் செல்லும் நோக்கம் எங்களுக்கு இல்லை. மதிப்புக்குரிய
ஆந்திர முதல்வரை அணுகி அவரிடம் எங்களது சூழலை விளக்கி ஓர் இணக்கமான தீர்வைக் கோர
உள்ளோம்," என்று கூறியுள்ளனர்.

