திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
d0da6abb-da92-4c8e-a454-a260f965ce1a
-
multi-img1 of 3

இயக்­கு­நர் கே.எஸ்.ரவிக்­கு­மா­ரி­டம் உதவி இயக்­கு­ந­ராகப் பணி­யாற்­றிய ஆர்.என்.ஆர்.மனோ­கர், 'மைந்­தன்', 'கோலங்­கள்'

உள்­ளிட்ட படங்­க­ளுக்கு கதை, வச­னம் எழுதி உள்­ளார். அஜித் நடித்த 'என்னை அறிந்­தால்' படத்­திற்கு இவர்­தான் வச­னம் எழு­தி­யி­ருந்­தார். பல படங்­களில் வில்­லன் மற்­றும் குணச்­சித்திர வேடங்­களில்

நடித்­துள்­ளார். கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த மனோ­கர் கடந்த 20 நாட்­க­ளாக சென்­னை­யில் ுள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்­தார். நோய்த்­தொற்று சரி­யான நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வெளி­யாக

வேண்­டிய நேரத்­தில் மார­டைப்பு ஏற்­பட்டு அவ­ரது உயிர் பிரிந்­தது. மனோ­கர் மறை­வுக்கு திரை­யு­ல­கி­னர் பலர் இரங்­கல்

தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மை­யில் வெளி­யான 'அண்­ணாத்த', 'ஜெய்­ பீம்' படங்­க­ளின் மூலம் மீண்­டும் தமி­ழில் காலடி எடுத்து வைத்­தி­ருக்­கி­றார் பிர­காஷ் ராஜ். சில தினங்­க­ளுக்கு முன்பு இவ­ரின் தொண்­டை­யில் புண்

ஏற்­பட்­டி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அத­னால் "மருத்­து­வ­ரின் ஆலோ­ச­னைப்­படி ஒரு வாரம் அதி­கம் பேசா­மல் மௌனம் காக்க இருக்­கி­றேன். நான் நல­மா­கத்­தான் இருக்­கி­றேன்," என்று தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்டு இருக்­கி­றார் பிர­காஷ் ராஜ்.

சமந்தா நடித்த தெலுங்­குப் படங்­களில் முக்­கியமான படம் 'ரங்­கஸ்­த­லம்'. இந்­தப் படத்தை இயக்­கிய சுகு­மார் அடுத்து அல்லு அர்­ஜுன், ராஷ்­மிகா மந்­தனா நடிக்­கும் 'புஷ்பா' என்ற படத்தை இரண்டு

பாகங்­க­ளாக இயக்கி வரு­கி­றார். இப்­ப­டத்­தில் ஒரே ஒரு பாட­லுக்கு மட்­டும் நட­ன­மாட இயக்­கு­நர் சுகு­மார், சமந்­தா­வி­டம் கேட்­ட­தை­ய­டுத்து உடனே நட­னம் ஆட சம்­ம­தித்து இருக்­கி­றார் சமந்தா. சமந்­தா­வின் திரை­யு­லக வாழ்க்­கை­யில் ஒரு படத்­தில் ஒரு பாட­லுக்கு நட­ன­மா­டு­வது இது­தான் முதல் முறை­யாம். அத­னால்,

இந்­தப் பாடலை மிக­வும் சிறப்­பாக பட­மாக்க இயக்­கு­நர் சுகு­மா­ரும் படக்­கு­ழு­வி­ன­ரும்

திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

விக்­னேஷ் சிவன்

'காத்­து­வாக்­குல ரெண்டு காதல்' என்­னும் திரைப்­

ப­டத்தை இயக்­கி­யுள்­ளார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருக்கின்றனர். இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு காலை­யில் விஜய் சேது­ப­தி­யின்

சுவ­ரொட்­டி­யும் மதி­யம் சமந்­தா­வின்

சுவ­ரொட்­டி­யும் மாலை­யில் நயன்தாரா­வின்

சுவ­ரொட்­டி­யும் வெளி­யா­னது. இந்­தப் படத்­தில் நயன்­தாரா 'கண்­மணி' என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருக்­கி­றார் என்­ப­தும் குறிப்­பி­டத்­

தக்­கது.