இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானார் பிரீத்தி ஸிந்தா!

1 mins read
b9b0b8cb-1107-4517-a73e-64c457aae3af
வாடகைத் தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட ஜீன் குட்எனஃப் - பிரீத்தி ஸிந்தா இணையர். படங்கள்: இணையம் -

புதுடெல்லி: இந்திப் படவுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த பிரீத்தி ஸிந்தா, 46, இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன் குட்எனஃப் என்பவரைக் காதலித்து, 2016ல் மணந்துகொண்டார் பிரீத்தி.

இந்நிலையில், வாடகைத் தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட செய்தியை இன்ஸ்டகிராம் வாயிலாக பிரீத்தி-ஜீன் இணையர் வெளியிட்டுள்ளனர்.

அக்குழந்தைகளுக்கு ஜெய் ஸிந்தா குட்எனஃப், ஜியா ஸிந்தா குட்எனஃப் என்று அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

வாடகைத் தாய், மருத்துவர்கள், தாதியர் ஆகியோர்க்கு நன்றி தெரிவித்துக்கொண்ட பிரீத்தி, வாழ்க்கையின் புதிய கட்டத்தில் அடியெடுத்து வைப்பதில் உற்சாகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.