தமிழ்த் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் 'டான்' படத்திற்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு வேடத்தில் பள்ளி மாணவனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
குறுகிய காலத்தில் இமாலய உயரத்திற்குச் சென்று இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் 'டான்' படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி கதைக்களத்தில்
உருவாகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார்.
'டான்' படத்தை முடித்துவிட்டு மீண்டும் அறிமுக இயக்குநர் அசோக் இயக்கத்தில் சிவகார்த்தி
கேயன் நடிக்க உள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் மிகச் சிறந்த நடிகராக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில்
சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பில் வெளியான
'டாக்டர்' திரைப்படம் ரூ.100 கோடியை கடந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
முன்னணி நாயகர்கள்
நடிக்கும் படங்களை 'சன்
பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த 'அண்ணாத்த' படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம்தான்
தயாரித்தது.
இந்த நிறுவனம் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் படத்தையும் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்திற்கு 'சிங்கப்பாதை' என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
மேலும் இதில் சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, சூரி, ஆர் ஜே விஜய், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க 'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து
பிரியங்கா அருள்மோகன் இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில் வடிவேலு நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரித்வி ராஜ் வில்லனாக நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தைப் பற்றிய புதுப் புதுச் செய்திகள் தினமும் வெளிவருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் உடல் எடையைக் குறைத்துள்ளாராம். தனுஷுடன் இவர் நடித்த '3' படத்திற்கு பிறகு, 'சிங்கபாதை' படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவனாக பள்ளி சீருடை அணிந்து நடிக்கிறார் என்று தெரிய வருவதாக கோலிவுட் செய்தி பரப்பி வருகிறது.