நடிகர் விவேக் 'சின்ன கலைவாணர்' என்று ரசிகர்களால் பாராட்டுக்கு
உரியவராக இருந்தார். கோவில்பட்டியில் பிறந்த இவர், இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்களைக் கொண்டிருந்தார். நகைச்சுவையிலும் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்த
முடியும் என்பதை நிரூபித்தவர்.
கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பு காரணமாக உயிர் நீத்தார். நேற்று இவருடைய பிறந்தநாள். அதனால் அவரைப் பற்றிய நினைவுகளைத் திரைப் பிரபலங்கள் பலர் தங்களுடைய டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.