நயன்தாரா நேற்று முன்தினம் தன்னுடைய பிறந்தநாளை 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடினார்.
புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி வியாழன் முழுவதும் நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியது. காதலர் விக்னேஷ் சிவனுடனும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழுவினரான விஜய்சேதுபதி மற்றும் சமந்தாவுடனும் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார் 'லேடி சூப்பர் ஸ்டார்'.
நயன்தாராவிற்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதுபோல 'ரவுடி பிக்சர்ஸ்' தயாரிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்தின் அறிவிப்பை இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிவித்தார்.
ஏற்கெனவே 'ரவுடி பிக்சர்ஸ்' மூலம் கவினின் 'ஊர் குருவி' படம் உருவாகி வரும் நிலையில், அடுத்ததாக இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கப்போகும் 'கனெக்ட்' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு முதல் சுவரொட்டியுடன் வியாழன் அன்று இயக்குநர் அஸ்வினால் வெளியிடப்பட்டது.
டாப்சி நடித்திருந்த 'கேம் ஓவர்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அஸ்வின் சரவணன் இயக்கத்தில் தமிழில் அந்தப் படத்தில் சமந்தா நடிக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன்னதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், திடீரென்று சமந்தாவுக்குப் பதிலாக அந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு சமந்தாவையும் அவரது ரசிகர் களையும் ஏமாற்றி உள்ளது.
'மாயா' படத்திற்குப் பிறகு அஸ்வின் சரவணன் நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைய வுள்ளது. இதுகுறித்து இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில், "திறமையான நடிகை நயன்தாரா மீண்டும் என்னுடைய இயக் கத்தில் நடிக்கவுள்ளது குறித்து என்னால் நம்பவே முடிய வில்லை. மேலும் இந்தப் படத்தைத் தயாரிக்கும் 'ரவுடி பிக்சர்ஸ்'க்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் துறையில் குறுகிய காலத்தில் அனைவராலும் ரசிக்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த மாதம் இவருடைய நடிப்பில் நான்கு படங்கள் வெளியாயின. மீண்டும் டிசம்பர் மாதத்தில் இவர் நடிப்பில் நான்கு படங்கள் வெளியாக இருப்பதாகவும் படங்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசும்போது, "எனக்கு நிறைய பிரச்சினைகள் கொடுக்கிறார்கள். படத்தை வெளியிடவிடாமல் நிறைய பேர் தடுக்கிறார்கள். பிரச்சினைகள் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை ரசிகர்களான நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்," என்று கண்ணீர் விட்டு அழுதது அவரின் ரசிகர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
'பிக்பாஸ் 5' நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியாகப்போவது இசைவாணி என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபி, அக்ஷரா, இமான் அண்ணாச்சி, அபினய், பாவனி, ஐக்கி பெர்ரி, தாமரை செல்வி, நிரூப் இவர்களைவிட குறைவான வாக்குகளைப் பெற்று இசைவாணி கடைசி இடத்தைப் பிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

